Kathir News
Begin typing your search above and press return to search.

கடந்த 2019 தேர்தலில் வாக்குப்பதிவு இயந்திரத்தின் மீது வராத சந்தேகம் தற்பொழுது தி.மு.கவிற்கு வருவது ஏன்?

கடந்த 2019 தேர்தலில் வாக்குப்பதிவு இயந்திரத்தின் மீது வராத சந்தேகம் தற்பொழுது தி.மு.கவிற்கு வருவது ஏன்?

Mohan RajBy : Mohan Raj

  |  17 April 2021 3:30 AM GMT

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் 38 தொகுதிகளில் தி.மு.க சார்பில் அமையப்பெற்ற கூட்டணி வெற்றி பெற்ற பொழுது வாக்கு எண்ணும் இயந்திரத்தின் மீது வராத சந்தேகம் தற்பொழுது 2021ல் தி.மு.கவிற்கு வாக்கு எண்ணும் இயந்திரங்கள் ஹேக் செய்யப்படுமோ என சந்தேகம் எழுந்துள்ளது.

நேற்று தனது குடும்ப சகிதமாக ஓய்வெடுக்க தனி விமானம் மூலம் கொடைக்கானல் சென்ற ஸ்டாலின் ஓய்வு நேரத்திலும் கூட வாக்கு இயந்திரங்கள் என்னவாகுமோ என்ற சந்தேகத்தில் தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

தி.மு.க தலைவர் ஸ்டாலின் எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது, "தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் வாக்குப் பதிவு ஏப்ரல் 6 அன்று நடைபெற்று முடிந்துள்ளது. வாக்குப்பதிவு முடிந்த பிறகு, ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியின் வாக்குச்சாவடியிலும் உள்ள கன்ட்ரோல் யூனிட்ஸ், பேலட் யூனிட்ஸ் ஆகியவை 'சுவிட்ச் ஆஃப்' (பேட்டரிகளை எடுக்காமல் - செயலற்ற வடிவில் (Dead Mode) வைக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்) செய்யப்பட்டு, விவிபிஏடி இயந்திரங்களில் இருந்த பேட்டரிகளும் வேட்பாளர் மற்றும் வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் அகற்றப்பட்டது.

அதன்பிறகு அப்படி சீலிடப்பட்ட கன்ரோல் யூனிட், பேலட் யூனிட். விவிபிஏடி எல்லாம் பாதுகாப்புடன் அந்தந்த சட்டமன்றத் தொகுதிகளின் பாதுகாப்பு அறைக்கு (Strong Room) எடுத்துச் செல்லப்பட்டன. ஏப்ரல் 7 அதிகாலை வரை மேற்கொள்ளப்பட்ட அந்தப் பணிகளை எங்கள் முகவர்கள் கண்ணும் கருத்துமாக கவனித்தார்கள்.

இதன்பிறகு கன்ட்ரோல் யூனிட், பேலட் யூனிட், விவிபிஏடி உள்ள அனைத்து மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களும் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டு வேட்பாளர்கள், முகவர்கள் முன்னிலையில் சீலிடப்பட்டன. அந்தப் பாதுகாப்பு அறைகளின் கதவுகளும், ஜன்னல்களும் முழுவதுமாக மூடப்பட்டு - யாரும் உள்ளே நுழையாதவாறு சவுக்கு கட்டைகளால் அடைக்கப்பட்டுள்ளது.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ள பாதுகாப்பு அறைக்கு மூன்று அடுக்குப் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. முதல் அடுக்காக- பாதுகாப்பு அறைக்கு அருகில்- உள்வட்டத்தில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினரின் பாதுகாப்பு. அதற்கு அடுத்து இரண்டாவது அடுக்காக- மாநில ஆயுதப்படை காவலர்கள் பாதுகாப்பு. மாவட்ட தேர்தல் அதிகாரிகள் படையைச் சேர்ந்தவர்கள் மூன்றாவது அடுக்கு பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ளார்கள்.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மே 2 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கைக்கு எடுக்கும் வரை அந்த பாதுகாப்பு அறைக்குள் யாரும் உள்ளே நுழைவதையும், அங்கிருந்து எதுவும் வெளியே போவதையும் தடுப்பதே இந்த மூன்று அடுக்குப் பாதுகாப்பின் மிக முக்கிய நோக்கம்" என அந்த கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பாதுகாப்பு தொடர்பாக குறிப்பிட்ட அவர், "மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை ஹேக்கிங் செய்யவோ, வை-பை அல்லது வேறு எந்த ஒரு வழியையும் பயன்படுத்தி மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் உள்ள பதிவுகளை சிதைக்கவோ, சூழ்ச்சி செய்து திருத்தவோ ஒரு சிறு துளி வாய்ப்பு கூட இருப்பதற்கு கட்டாயம் அனுமதிக்கக் கூடாது. மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை சிதைக்கவோ, சூழ்ச்சி செய்து திருத்தவோ முடியாது என்று தேர்தல் ஆணையம் தொடர்ந்து கூறி வருகின்ற நிலையில், அவற்றிற்கு வழி அமைத்துக் கொடுக்கும் வகையில் நடைபெற்றுள்ள மேலே சுட்டிக்காட்டப்பட்டுள்ள இந்த முயற்சிகள்- தேர்தல் ஆணையம் தொடர்ந்து கூறி வரும் கருத்தின் மீதான நம்பிக்கையை இழக்க வைக்கிறது.

அப்படி மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை ஹேக் செய்வதும், சூழ்ச்சி செய்து திருத்துவதும் நடைபெற்றால்- உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவின் ஜனநாயக கட்டமைப்பே தகர்த்து விடும்" என அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

வாக்கு பதிவு இயந்திரத்தை ஹேக் செய்ய இயலாது எனவும், அவைகள் 3 அடுக்கு பாதுகாப்புடன் இருப்பது அனைவரும் அறிந்ததே இந்த நிலையில் ஒரு வேளை தோல்வி ஏற்பட்டால் அதற்கு இப்பொழுதே காரணத்தை ஸ்டாலின் தேடி வருகிறார் என அரசியல் வட்டாரத்தில் பேச்சு நிலவுகிறது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News