Kathir News
Begin typing your search above and press return to search.

"இந்தியாவில் 2024'ம் ஆண்டு இறுதிக்குள் அமெரிக்காவுக்கு நிகரான சாலை வசதிகள்" - நிதின் கட்காரி உறுதி

இந்தியாவில் 2024ம் ஆண்டு இறுதிக்குள் அமெரிக்காவுக்கு நிகரான சாலை வசதிகள் - நிதின் கட்காரி உறுதி
X

Mohan RajBy : Mohan Raj

  |  6 March 2022 7:15 PM IST

"மக்களின் விரைவான போக்குவரத்திற்கு கயிறு, கேபிள் போன்ற வழிகளில் மின்சாரத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் தொழில்நுட்பத்தை இந்தியா அமல்படுத்த ஆர்வமாக இருக்கிறது" என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

இந்தியா 2.0 தொடரின் ஒரு பகுதியான இந்தியாவின் உட்கட்டமைப்பை மீண்டும் கட்டமைத்தல் என்ற தலைப்பில் அவர் தனது உரையை ஆற்றினார். அப்பொழுது அவர் கூறியதாவது, "நாங்கள் செலவு குறைந்த மற்றும் மின்சாரத்தில் இயங்கக் கூடிய போக்குவரத்து வசதிகளை வெகுஜன பயன்பாட்டிற்காக இந்தியாவில் உருவாக்க தொழில்நுட்பத்தை தேடி வருகிறோம் குறிப்பாக மக்களின் பொது போக்குவரத்திற்கு அந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்த யோசனை செய்யப்பட்டு வருகிறோம்" என பேசினார்.


இதன்மூலம் ஜம்மு காஷ்மீர், உத்தரகாண்ட், இமாச்சல பிரதேசம், மணிப்பூர் மற்றும் சிக்கிம் ஆகிய மாநிலங்களில் இணைப்பை அதிகரிக்கும் திட்டங்களை மத்திய அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும், அமெரிக்காவை தளமாக கொண்ட நிறுவனங்கள் மின்சார வாகன தொழிற்சாலை மற்றும் தொழில்நுட்பம் தொடர்பான எங்களின் தேவையைப் புரிந்து கொண்டு சூரிய ஒளி மற்றும் மின்சாரத்திற்கான போக்குவரத்து வசதியை தயார் செய்ய திட்டங்கள் வேண்டும்" எனவும் கூறினார்.


மேலும் ஒரு கேள்விக்கு மத்திய அமைச்சர் நிதின்கட்கரி பதிலளிக்கையில், "2024 ஆம் ஆண்டின் இறுதிக்குள் இந்தியாவில் சாலை கட்டமைப்புகளை அமெரிக்காவிற்கு இணையாக மாற்றுவோம்" என்பதில் நம்பிக்கை உள்ளது எனவும் கூறினார்.



Source - swarajya

Next Story
கதிர் தொகுப்பு
Trending News