திமுக கூட்டணி எம்.பிக்களை துரத்தும் மக்கள்! 2024 மொத்தமும் போச்சா? மாறிய தமிழ்நாடு....
By : Mohan Raj
திமுக எம்பிக்களை தொடர்ந்து ஓடவிடும் மக்கள்...! எம்.பிக்கள் அலறியடித்து ஓடும் அவலம்...!
கடந்த 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணி 38 தொகுதிகளில் தமிழகத்தில் வெற்றி பெற்றது, 38 தொகுதிகளில் தமிழகத்தில் வெற்றி பெற்றாலும் மத்தியில் பாஜக ஆட்சி அமைத்ததன் காரணமாக தமிழகத்திலிருந்து சென்ற 38 தொகுதி எம்பிக்களும் எதிர்க்கட்சி வரிசையில் அமர வைக்கப்பட்டனர்.
இது மட்டுமல்லாமல் கடந்த முறை தேர்தலை சந்திக்கும் பொழுது ஏகப்பட்ட வாக்குறுதிகளை அந்த சமயத்தில் திமுக எம்பி வேட்பாளர்கள் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக மக்கள் மத்தியில் அள்ளி தெளித்துள்ளனர் என கூறப்படுகிறது. இதன் காரணமாக 38 தொகுதிகளிலும் மக்கள் கொதிப்பில் இருப்பதாக தகவல்கள் கிடைக்கின்றன.
இந்த நிலையில் தொடர்ச்சியாக திமுக எம்பிக்கள் மக்களால் கேள்வி கேட்டு துரத்தப்படுவதும், செய்தியாளர்கள் தொடுக்கும் கேள்விக்கும் பதில் கூறாமல் தொகுதியில் இருந்து வெளியேறுவதும் வாடிக்கையாகி வருகிறது.
கடந்த ஆகஸ்ட் மாதம் 22ஆம் தேதி திருச்சி மாவட்டம் 29 வது வார்டு ஆழ்வார் தோப்பு பகுதிக்கு நான்கு வருடத்திற்கு பிறகு வருகை தந்த திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசரை இஸ்லாமிய மக்கள் முற்றுகையிட்டனர், மக்களுக்கு தேவைகளை கூட கேட்டு நிறைவேற்ற முடியாமல் ஓட்டு கேட்க மட்டும் வருகிறீர்களே எனக்கூறி இஸ்லாமிய மக்கள் திருநாவுக்கரசர் மீது கேள்வி எழுப்புகையில் என்ன பதில் கூறுவென்று தெரியாமல் திகைத்து நின்றார் திமுக எம்பி திருநாவுக்கரசர்.
மேலும் மக்கள் எம்பியை முற்றுகையிட்டு கோஷம் எழுப்பி தரையில் அமர்ந்த தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர், பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட இஸ்லாமியர்களை திருநாவுக்கரசர் சமாதானப்படுத்தி கெஞ்ச வேண்டியதாய் நிலைமை ஏற்பட்டு விட்டது. இது ஒரு சம்பவம்!
அடுத்தபடியாக கடந்த ஆகஸ்ட் மாதம் சுதந்திர தினத்தை முன்னிட்டு கிராமசபை கூட்டங்கள் தமிழகத்தின் பெரும்பாலான கிராமங்களில் நடைபெற்றது அப்போது கிராம சபை கரூர் அருகே உள்ள மூக்கணாங்குறிச்சி ஊராட்சியில் சுதந்திர தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. அந்த கிராம சபை கூட்டத்திற்கு கரூர் எம்பி ஜோதிமணி சிறப்பு பங்கேற்பாளராக கலந்து கொண்டார்.
அப்போது அங்கு இருந்த பொதுமக்கள் சிலர் எம்.பி ஜோதிமணியை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர், அப்போது அங்கிருந்து ஒருவர் தேர்தல் சமயத்தில் ஓட்டு கேட்க மட்டும் வந்தீங்க! வெற்றி பெற்ற பிறகு இப்போ வந்து இருக்கீங்க! தேர்தல் வந்தால்தான் எங்க ஞாபகம் வருமா? போன் செய்வதால் எடுப்பதில்லை எங்க ஊருக்கு என்ன செய்து கொடுத்திருக்கீங்க? என மக்கள் கேள்வி மேல் கேள்வி எழுப்ப அதற்கு பதிலளிக்க முடியாமல் ஒரு கட்டத்திற்கு மேல் கரூர் எம்பி ஜோதிமணி அங்கிருந்து வெளியேறிய சம்பவம் இணையத்தில் வீடியோவாக வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தியது.
இந்த நிலையில் இப்படி திமுக கூட்டணி எம்பிகள் தொடர்ந்து துரத்தப்படுவது வாடிக்கையாகி வரும் சூழலில் தற்பொழுது சிதம்பரத்தில் செய்தியாளர்கள் கேள்விக்கு பதில் அளிக்க முடியாமல் திருமாவளவன் திணறி இருக்கிறார்.
சிதம்பரத்தின் சில நிகழ்ச்சிகளுக்காக சென்ற திருமாவளவனை செய்தியாளர்கள் சூழ்ந்து கொண்டு கேள்வி எழுப்பினர், அப்பொழுது செய்தியாளர் ஒருவர் திருமாவளவனிடம் 'நீங்கள் சிதம்பரம் தொகுதிக்கு செய்தது என்ன? பாராளுமன்ற உறுப்பினராக இருந்து கொண்டு நீங்கள் வெற்றி பெற்றவுடன் என்ன சொன்னீர்களோ அதை சிதம்பரத்துக்கு செய்தீர்களா? சிதம்பரத்தில் உங்கள் எம்பி அலுவலகம் கூட இல்லை! உங்களை பார்ப்பதற்கு சென்னைக்கு வர வேண்டுமா உங்களுக்கு வாக்களித்த மக்கள்? என்றெல்லாம் கேள்வி எழுப்ப உடனே அங்கிருந்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கோபம் அடைந்து செய்தியாளர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் நிலைமை விபரீதம் ஆவதை புரிந்து கொண்ட திருமாவளவன் விடுதலை சிறுத்தைகள் கட்சியினரை சமாதானப்படுத்தும் விதமாக செய்தியாளர்கள் என்றால் கேள்வி கேட்க வேண்டும். அவர்கள் கேட்பது நியாயம்தான் எனக்கு கூறியுள்ளார்.
ஒரு கட்டத்திற்கு மேல் அங்கு இருந்தால் ஏதேனும் விவகாரம் ஆகிவிடும் என்பதற்காக அங்கிருந்து திருமாவளவன் செய்தியாளர்கள் சந்திப்பை விரைவில் முடித்துக்கொண்டு கிளம்பியுள்ளார். இந்த விவகாரமும் தற்போது வெளியில் வந்து பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
இப்படி தொடர்ச்சியாக ஐந்து ஆண்டுகளாகிய என்ன செய்தீர்கள்? என திமுக கூட்டணி கட்சி எம்பிக்களை கேள்வி கேட்டு பொதுமக்கள் ஓட விடும் சம்பவம் ஒவ்வொரு இடங்களிலும் நடைபெற்று வருவதால் திமுக தரப்பு என்ன செய்வது என்று தெரியாமல் விழித்து வருவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளது. மேலும் இன்னும் ஐந்து மாதமே தேர்தலுக்கு இருக்கும் நிலையில் மக்கள் இப்படி திமுக கூட்டணி எம்பிக்களை விரட்டுவது திமுக கூட்டணிக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என கருத்துக்கள் எழுந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.