Begin typing your search above and press return to search.
பென்ஸ் காரில் 234 மதுபாட்டில்களை கடத்திய தி.மு.க பிரமுகர்..!

By :
பென்ஸ் காரில் சென்று ஆந்திரா சென்று மதுபாட்டில்களை கடத்தி வந்த தி.மு.க பிரமுகரை போலீசார் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே ஆரம்பாக்கம் காவல் நிலைய காவலர்கள் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்பொழுது அந்த வழியாக ஆந்திராவில் இருந்த வந்த சொகுசு காரை நிறுத்தி சோதனை செய்ததில் காரின் பின்பகுதியில் 234 மதுபாட்டில்கள் சிக்கின.
இதனையடுத்து மதுபாட்டில்களை பறிமுதல் செய்து விசாரித்த போலீசார் விசாரணையின் முடிவில் சென்னை திருவெற்றியூரை சேர்ந்த தி.மு.க பிரமுகரும் தொழிலதிபருமான எஸ்.என்.ஆர்.நாகராஜன் மற்றும் சிவக்குமார் ஆகியோரை கைது செய்தனர்.
Source - News J
Next Story