செந்தில் பாலாஜி கொடுத்த 24 மணி நேர கெடு முடிந்தது ஏன் வழக்கு தொடராமல் இருக்கிறார்? - அண்ணாமலை

By : Mohan Raj
"அமைச்சர் செந்தில்பாலாஜி விதித்திருந்த 24 மணிநேர கெடு முடிந்து பல 24 மணி நேரங்கள் ஆகிவிட்டன ஏன் இன்னும் அவர் என் மீது வழக்கு தொடுக்கவில்லை?" என அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
சமீபத்தில் பா.ஜ.க தலைவர் அண்ணாமலை மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மீது ஊழல் குற்றச்சாட்டுகளை வைத்திருந்தார், அது தொடர்பாக தனியார் பத்திரிகை ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது, "பி.ஜி.ஆர் ஒப்பந்த விவகாரத்தில் ஏற்கனவே நாங்கள் ஆதாரங்களை கொடுத்துவிட்டோம் பேசிய நிறுவனத்திற்கு 4,442 கோடி ரூபாய் மதிப்புள்ள மின் திட்ட ஒப்பந்த பணிகள் எப்போது கொடுக்கப்பட்டன, ஒப்பந்தம் கொடுக்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் கடந்தும் சம்பந்தப்பட்ட நிறுவனம் செயல்திறன் உத்தரவாதம் அளிக்காதது ஏன் என்பது போன்ற கேள்விகள் முக்கியமானவை" என்றார்.
இந்நிலையில் குற்றச்சாட்டுகள் ஆதாரம் கொடுக்கப்படவில்லை என்றால் உங்கள் மீது வழக்கு தொடுக்கப்படும் என அமைச்சர் செந்தில்பாலாஜி கூறியிருப்பது பற்றி எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், "செந்தில் பாலாஜி எனக்கு விதித்திருந்த 24 மணிநேர கெடு முடிந்து பல 24 மணி நேரங்கள் ஆகிவிட்டன, ஏன் மீது வழக்கு தொடுக்கவில்லை? விஷயம் அதுவல்ல நம் நாட்டில் குறிப்பிட்ட நடைமுறைகள் இருக்கின்றன. எனவே நீதிமன்றம் வழியே நமக்கு வழக்குத் தொடுப்பதை விட ஆழமாக விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் ஆனால் தான் எங்கள் கைவசம் உள்ள ஆதாரங்களை நாங்கள் ஆளுநரிடம் கொடுத்திருக்கிறோம்" என்றார் அண்ணாமலை.
மேலும் பேசிய அவர், "இந்த விஷயத்தில் எந்த ஒரு கருத்தும் சொல்லாமல் ஏன் தமிழக முதல்வரின் அமைதி காக்கிறார்? தமிழக அரசு எந்த தவறும் செய்யவில்லை என்றால் இது குறித்து முழுமையான விசாரணை நடத்த வேண்டியதுதானே" எனவும் கேள்வி எழுப்பினார்.
