ஸ்டாலின் நிகழ்ச்சிக்காக 25 நிமிடம் காக்க வைக்கப்பட்ட நீதிபதி - தமிழக அரசுக்கு குட்டு வைத்த நீதிமன்றம் !

முதல்வர் ஸ்டாலின் நிகழ்ச்சிக்காக டிராபிக்கில் நிறுத்தப்பட்ட நீதிபதி 25 நிமிடம் நிறுத்தப்பட்டதால் தமிழக அரசுக்கு நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
இன்று நடிகர்சிவாஜி கணேசனின் 96'வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு சென்னை அடையாறு டி.ஜி.எஸ்.தினகரன் சாலையில் உள்ள சிவாஜி மணி மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் ஸ்டாலின் கலந்து கொண்டார். அதற்காக அவர் செல்லும் சாலைகளில் இரும்பு தடுப்புகளை அமைத்து சாலைகளில் போக்குவரத்தை நிறுத்தி வைத்தனர்.
இதனால் அந்த சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அந்த சாலை வழியாக உயர்நீதிமன்றம் வந்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் வாகனத்தையும் காவல்துறையினர் தடுத்துள்ளனர்.
இதனால் உயர்நீதிமன்றத்திற்கு 25 நிமிடம் தாமதமாக வந்ததால் தனது பணி பாதிக்கப்பட்டுள்ளதால் இது குறித்து உள்துறை செயலாளர் ஆஜாரகி விளக்கம் அளிக்க நீதிபதி ஆனந்த் வெங்கடடேஷ் உத்தரவிட்டார்.
அதனடிப்படையில் காணொலி காட்சி மூலம் ஆஜரான உள்துறை செயலாளர் பிரபாகரிடம், எதனடிப்படையில் 25 நிமிடங்கள் தடுத்து நிறுத்தினீர்கள்? பொது ஊழியரான நீதிபதியான என்னை பணி செய்ய விடாமல் தடுத்தது நீதிமன்ற அவமதிப்பாகாதா, என நீதிபதி சரமாரியாக கேள்வி எழுப்பினார். இதையடுத்து, முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் நிகழ்ச்சிக்கு போகும் போது இதுபோல் காவல்துறையினர் தடுத்து நிறுத்துவார்களா என கேள்வி எழுப்பிய நீதிபதி, முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களுக்கு வழங்கப்படும் அதே மரியாதையை நீதிபதிகளுக்கும் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.