Kathir News
Begin typing your search above and press return to search.

கவுன்சிலர் சீட்டுக்கு ரூ.25 லட்சம்: மதுரை தி.மு.க.வின் கைவரிசைகள்!

கவுன்சிலர் சீட்டுக்கு ரூ.25 லட்சம்: மதுரை தி.மு.க.வின் கைவரிசைகள்!

ThangaveluBy : Thangavelu

  |  28 Jan 2022 4:50 AM GMT

மதுரை மாநகராட்சி கவுன்சிலர் சீட் பெறுவதற்கு குறைந்தபட்சம் ரூ.25 லட்சம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாகவும் அதனை வெளிப்படையாக சொல்வதற்கு முடியாமல் திமுக சீனியர்கள் புலம்பி வருகின்றனர்.

கடந்த 10 ஆண்டுகளாக பதவி இல்லாமல் திமுகவினர் தவித்து வருகின்றனர். அதற்கான வாய்ப்பாக திமுக ஆட்சியில் அமர்ந்திருப்பதால் இந்த முறை எப்படியாகவது ஒரு பதவியை வாங்கி விட வேண்டும் என்ற எண்ணத்தில் பலர் உள்ளனர். தற்போது ஒரு வாய்ப்பாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அமைந்துள்ளது. கட்சிக்காக உழைத்தவர்களும், பணத்தை வைத்துள்ளவர்களும் கவுன்சிலர் சீட் வாங்குவதற்கு தற்போதில் இருந்து தயாராகியுள்ளனர்.

அதன்படி நகரில் உள்ள கவுன்சிலர் பதவிக்கு ஏகப்பட்ட டிமாண்ட் இருப்பதாக கூறப்படுகிறது. குறைந்தளவு ஒரு மாவட்டத்தில் ரூ.25 லட்சம் முதல் ரூ.30 லட்சம் வரை பணம் வசூல் வேட்டை ஆரம்பமாகியுள்ளது.

Source,Image Courtesy: Dinamalar


Next Story
கதிர் தொகுப்பு
Trending News