Kathir News
Begin typing your search above and press return to search.

தமிழ்நாடு உட்பட பல மாநிலங்களில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு வெளியிட தடை! ஏப்ரல் 29 வரை அமலுக்கு வரும் உத்தரவு!

தமிழ்நாடு உட்பட பல மாநிலங்களில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு வெளியிட தடை! ஏப்ரல் 29 வரை அமலுக்கு வரும் உத்தரவு!
X

MuruganandhamBy : Muruganandham

  |  27 March 2021 12:54 PM GMT

இந்திய தேர்தல் ஆணையம் பிப்ரவரி 26, மற்றும் மார்ச் 16 ஆகிய தேதிகளில் வெளியிட்டஅறிவிப்பில் தெரிவித்தபடி, சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் அசாம், கேரளா, தமிழ்நாடு, மேற்கு வங்கம் மற்றும் புதுச்சேரி மற்றும் மக்களவை இடைத்தேர்தல் மற்றும் சட்டப்பேரவை இடைத் தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு நடத்த தடை விதிக்கப்படுகிறது.

அதன் படி, மாரச் 27ம் தேதி(சனிக்கிழமை) காலை 7 மணி முதல் ஏப்ரல் 29ம் தேதி(வியாழக்கிழமை) மாலை 7.30 மணிக்கு இடைபட்ட காலத்தை, தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு நடத்தவோ, அதன் முடிவுகளை அச்சு மற்றும் எலக்ட்ரானிக் ஊடகங்கள் அல்லது வேறு விதத்தில் வெளியிட தடை விதிக்கப்பட்ட காலமாக அறிவித்துள்ளது.

மக்கள் பிரதிநிதித்துவ சட்டம், 1951 126ஏ பிரிவு துணைப்பிரிவு 1-ன் கீழ் வழங்கப்பட்ட அதிகாரத்தின் படி, இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

மேலும், மக்கள் பிரதிநிதித்துவ சட்டம், 1951 126(1)(பி) பிரிவின் கீழ், மேலே கூறப்பட்ட சட்டப்பேரவை பொது தேர்தல் மற்றும் இடைத் தேர்தல் நடைபெறும் பகுதிகளில் ஒவ்வொரு கட்ட தேர்தல் முடியும் நேரத்துக்கு 48 மணி நேரத்துக்கு முன்பாக, கருத்து கணிப்பு அல்லது எந்தவித கணக்கெடுப்பு முடிவுகள் உட்பட தேர்தல் தொடர்பான எந்தவொரு விஷயத்தையும் எலக்ட்ரானிக் ஊடகங்களில் வெளியிட தடைவிதிக்கப்படுகிறது.

இது தொடர்பாக இந்த ஆண்டு மார்ச் 24ம் தேதி வெளியிடப்பட்ட அறிவிப்பும், சம்பந்தப்பட்ட அனைத்தும் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News