தமிழகத்தில் என்.ஐ.ஏ'வின் வேட்டை - கோவையில் அதிரடியாக 3 பேரின் வீடுகளில் சோதனை !

கோவை மாவட்டத்தில் புலியகுளம், சுங்கம், பொள்ளாச்சி ஆகிய பகுதிகளில் உள்ள மாவோயிஸ்ட் ஆதரவாளர்கள் 3 பேரின் வீடுகளில் தேசிய புலனாய்வு அதிகாரிகளின் சோதனை நடந்தது.
தமிழகம், கேரளா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் மாவோயிஸ்ட் அமைப்பினருடன் தொடர்பில் இருக்கும் நபர்களின் வீடுகளில் இன்று காலை 6.30 மணி முதல் தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ) அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனை 3 மாநிலங்களையும் சேர்த்து மொத்தம் 23 இடங்களில் நடத்தினர்.
இன்று கேரள மாநிலத்தில் இருந்து வந்த தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் 3 பிரிவுகளாக பிரிந்து மாவோயிஸ்ட் ஆதரவாளர்கள் டாக்டர் தினேஷ், டேனிஷ், சந்தோஷ் ஆகியோரின் வீடுகளில் இன்று காலை 6.30 மணி முதல் சோதனை நடத்தி வருகிறார்கள்.
என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடைபெறும் மாவோயிஸ்ட் ஆதரவாளர்கள் வீடுகள் முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.