ஒரே நேரத்தில் அமெரிக்கா நியூ ஜெர்சி என 3 பகுதிகளில் இருந்து தனது ஐடி'யை இயக்கிய திரிணாமுல் காங்கிரஸ் எம்பி!
By : Sushmitha
திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹூவா மொய்த்ராவின் பார்லிமென்ட் ஐ டி துபாய் உள்ளிட்ட இரண்டு வேறு பகுதிகளில் இருந்தும் பயன்படுத்தப்பட்டுள்ளதாக சமீபத்தில் தகவல் ஒன்று வெளியானது. அந்த இரண்டு வேறு பகுதிகளும் நியூ ஜெர்சி, அமெரிக்கா மற்றும் பெங்களூர் என பிரபல தனியார் பத்திரிகை நிறுவனம் தரப்பில் ஆதாரங்கள் வெளியிடப்பட்டது. மேலும் இவர் துபாயை தவிர கொல்கத்தாவில் இருந்த போதும் அதே நாளில் டெல்லியில் இருந்த போதும் நியூ ஜெர்சி மற்றும் பெங்களூரில் இருந்தும் அவரது ஐடி உபயோகப்படுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இதன் பின்னணியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசாங்கத்தை குறிவைத்து பாராளுமன்றத்தில் கேள்விகளை கேட்பதற்காகவே தொழிலதிபர் தர்ஷன் ஹிராநந்தனியிடம் அவர் லஞ்சம் பெற்றதாக பாஜக எம். பி. நிஷிகாந்த் துபே குற்றம் தெரிவித்தார். இதனால் அவர் மீதான குற்றச்சாட்டுகளை மக்களவை நெறிமுறைக் குழு விசாரித்தது மேலும் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. வெளியேற்றவும் பரிந்துரைத்தது!
இதற்கு முன்பாக ரியல் எஸ்டேட் மற்றும் உள்கட்டமைப்பு நிறுவனமான ஹிரா நந்தானி குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான ஹிராநந்தனி உடன் தனது அதிகாரப்பூர்வ உள்நுழைவு விவரங்களை பகிர்ந்து கொண்டதாக மொய்த்ரா ஒப்புக்கொண்டார். இதனை அடுத்து இவர் மீதான குற்றச்சாட்டுகள் குறித்த தகவல்களை மக்களவை நெறிமுறை குழு சபாநாயகர் ஓம் பிர்லா அலுவலகத்தில் இந்த மாத தொடக்கத்திலேயே சமர்ப்பித்தது. இருந்தபோதிலும் டிஎம்சி எம். பி. மஹூவா மொய்த்ரா குற்றச்சாட்டை மறுத்ததோடு இதற்கு சிறு ஆதாரம் கூட இல்லை என்று தெரிவித்துள்ளார்!!
Source. : Swarajya