Kathir News
Begin typing your search above and press return to search.

தொடர்ந்து 30 ஆயிரத்திற்கும் குறையாத கொரோனோ தொற்று - கொரோனோ இரண்டாம் அலையை சமாளிக்க திணறுகிறதா தி.மு.க அரசு?

தொடர்ந்து 30 ஆயிரத்திற்கும் குறையாத கொரோனோ தொற்று - கொரோனோ இரண்டாம் அலையை சமாளிக்க திணறுகிறதா தி.மு.க அரசு?

Mohan RajBy : Mohan Raj

  |  19 May 2021 2:30 AM GMT

தமிழகத்தில் தி.மு.க ஆட்சி பொறுப்பில் அமைந்த சமயம் கொரோனோ இரண்டாம் அலை தீவிரமடைந்தது. கொரோனோ முதல் அலை தமிழகத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் சமயம் அ.தி.மு.க ஆட்சியில் இருந்தது. எடப்பாடி பழனிசாமி மத்திய அரசிடம் நல்லவிதமான இணக்கமான போக்கை கடைபிடித்ததால் கொரோனோ முதல் அலையை சரியாக சமாளித்து பாதிப்பு அதிகமெ ஏற்படாவண்ணம் தமிழகத்தை கொரோனோ முதலாம் அலையில் இருந்து காப்பாற்றினார்.

தற்பொழுது இரண்டாம் அலையில் தி.மு.க அரசு ஊரடங்கை அமல்படுத்தியும் அதனை சரிவர கடைபிடிக்காத காரணத்தினால் ஊரடங்கு அறிவித்து 10 நாட்களுக்கு மேலாகியும் கொரோனோ தொற்றாளர்களின் எண்ணிக்கை 30 ஆயிரத்திற்கும் குறைவில்லாமல் தினமும் தொற்று ஏற்பட்டுகொண்டிருக்கிறது. இதனால் தி.மு.க அரசிற்கு ஊரடங்கை சரிவர கையாள தெரியவில்லையா அல்லது பேரிடர் கால மருத்துவ நிர்வாகம் தெரியவில்லையா என்ற ஐயம் எழுந்துள்ளது.

குறிப்பாக நேற்று ஒரே நாளில் மட்டும் தமிழகத்தில் 33,059 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.


இதுகுறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது,

"தமிழகத்தில் இன்று புதிதாக 33,059 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 16,64,350 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா பாதிப்பால் தமிழகத்தில் இன்று 364 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 18,369 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் இன்று மேலும் 21,362 பேர் கொரோனா சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 14,03,052 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் தற்போது 2,42,29 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. சென்னையில் இன்று மேலும் 6,016 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


மக்களின் நலனை கருத்தில் கொண்டு அனுபவம் இல்லாவிட்டாலும், பேரிடர் கால நிர்வாகம் தெரியாவிட்டாலும் அனுபவம் வாய்ந்தவர்களை கேட்டு தி.மு.க அரசு இன்னும் தீவிரமாக இயங்குவது கொரோனோ இரண்டாம் அலையை பெரிய அளவில் பாதிப்பின்றி சமாளிக்க இயலும்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News