டாஸ்மாக்கில் தினமும் 30 கோடிக்கு மேல் தினமும் கணக்கில் வராத கறுப்புப் பணம் - செந்தில் பாலாஜி ரகசியம் உடைக்கும் நிர்மல்குமார்!

By : Kathir Webdesk
ஆலந்தூரில் உள்ள லஞ்ச ஒழிப்புத்துறை தலைமை அலுவலகத்தில் பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவு மாநில தலைவர் சி.டி.ஆர். நிர்மல்குமார் புகார் அளித்தார்.
தமிழக அரசு நடத்தும் டாஸ்மாக் மதுபானக்கடைகளில் பல முறைகேடுகள் நடக்கிறது. 10% வரை கூடுதல் விலைக்கு விற்கப்படுகிறது. நாள் ஒன்றிற்கு 130 கோடி வரை மது தமிழகத்தில் விற்பனையாகும் நிலையில் 10% கூடுதல் விலை என்பது 13 கோடி வரை கணக்கில் வராத கறுப்புப் பணமாக தரப்படுகிறது.
சட்டப்படி பார்களில் மது விற்பனை செய்யக்கூடாது, ஆனால் தமிழகத்தில் உள்ள 3000க்கும் அதிகமான பார்களில் 24 மணி நேரமும் 60% விலை கூடுதலாக விற்கப்படுகிறது.
மதுபான பார்களில் சட்டவிரோத மது விற்பனையில் 3000 பார்களில் சுமார் 30 கோடிக்கு மேல் தினமும் கணக்கில் வராத கறுப்புப் பணமாக தரப்படுவதாகவும் புகார் அளித்திருந்தார்.
அது தொடர்பாக விசாரணைக்கு இன்று லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் ஆஜராகி அது குறித்து விசாரணை அதிகாரியிடம் விளக்கம் அளித்தார்.
Input From:
