உதயநிதியும், சபரீசனும் சேர்த்த 30 ஆயிரம் கோடி - உண்மையை கக்கிய பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன்
By : Mohan Raj
உதயநிதி சபரீசன் ஆகிய இருவரும் முப்பதாயிரம் கோடி ரூபாய் பணத்தை சேர்த்து வைத்த உண்மையை திமுகவின் அமைச்சர் ஒப்புக்கொண்டுள்ள ஆடியோ வெளியாகிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திமுகவில் கிட்டத்தட்ட ஒன்றரை லட்சம் கோடி அளவிற்கு சொத்து சேர்த்து வைத்திருப்பதாக அண்ணாமலை ஆதாரங்கள் வெளியிட்ட பின்பு ஒவ்வொரு தகவல்களாக வெளிவந்து கொண்டிருக்கின்றன. முதலில் திமுகவை சேர்ந்த ஆர்.எஸ் பாரதி மட்டும் இதுகுறித்து பேசிவந்தார். ஆனால் விவகாரம் சி.பி.ஐ ரைடு வரை செல்லும் என்ற தகவல் தெரிந்து உதயநிதி, கே.என்.நேரு, கனிமொழி ஆகியோர் தற்பொழுது அண்ணாமலை கூறிய புகாருக்கு அய்யோ, அப்படியெல்லாம் இல்லை என மறுப்பு சொல்ல துவங்கிவிட்டனர்.
சிபிஐ வசம் அண்ணாமலை வைத்திருக்கும் ஆதாரங்களை ஒப்படைக்கப் போவதாக தெரிவித்து வந்த நிலையில் திமுகவின் அமைச்சரவையில் இருந்து நிதி அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் தற்போது பேசும் ஆடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது தமிழக நிதி அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் பேசும் ஆடியோ என ஒன்றை மூத்த பத்திரிகையாளர் சவுக்கு சங்கர் வெளியிட்டு இருக்கிறார். அந்த ஆடியோவில், பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் ஒரே வருடத்தில் கொஞ்சமாக 20 கோடி, 30 கோடி என முதல்வர் மகனும், அமைச்சருமான உதயநிதி, முதல்வர் மருமகன் சபரீசன் ஆகியோர் சேர்ந்து முப்பதாயிரம் கோடி சொத்து சேர்த்திருப்பதாகவும். அதை வெள்ளையாக மாற்றுவது எப்படி என கடும் பயத்தில் இருப்பதாகவும் பி டி ஆர் ஆங்கிலத்தில் பேசும் வார்த்தைகள் இடம்பெற்று இருக்கின்றன.
டெல்லியில் உள்ள பத்திரிகையாளர் ஒருவரிடம் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாக கூறி பேசிய ஆடியோவை சவுக்கு சங்கர் வெளியிட்டுள்ளார். இதெல்லாம் ஒருபுறம் என்றால் தற்போது கடும் அதிர்வலைகளை ஏற்படுத்த இருக்கும் அடுத்த தகவல் வெளியாகியிருக்கிறது, விரைவில் சிபிஐ நேரடியாக இந்த விவகாரத்தல் திமுக முக்கிய தலைவர்கள் சொத்து குவித்துள்ளதை அண்ணாமலை கூறிய புகார், பி டி ஆர் பழனிவேல் தியாகரஜனின் ஆடியோ என அனைத்தையும் வைத்து அறிவாலயம், முதல்வர் வீடு, உதயநிதி வீடு, சபரீசன் வீடு என அனைத்து இடங்களிலும் ரைடு நடத்தி வழக்கு பதிவு செய்ய 90 சதவீத வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.
அண்ணாமலை கூறிய புகாருக்கு வலு சேர்க்கும் வகையில்
நிதி அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் பேசிய இந்த ஆடியோ வெளிவந்தது பல்வேறு அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது