Kathir News
Begin typing your search above and press return to search.

திட்டக்குடி பயங்கரம்: ஆட்டு மந்தை போல் அடைத்து தி.மு.க பிரச்சாரத்திற்கு அழைத்து சென்று விபத்து - 35 பேர் படுகாயம்!

திட்டக்குடி பயங்கரம்: ஆட்டு மந்தை போல் அடைத்து தி.மு.க பிரச்சாரத்திற்கு அழைத்து சென்று விபத்து - 35 பேர் படுகாயம்!
X

Mohan RajBy : Mohan Raj

  |  1 April 2021 9:56 PM IST

மக்களை ஆட்டு மந்தை போல் ஒரு சிறிய டாடா ஏஸ் வாகனத்தில் அடைத்து தி.மு.க பிரச்சாரத்திற்கு அழைத்து சென்ற பொழுது ஏற்பட்ட விபத்தில் 35 பேர் படுகாயமடைந்தனர்.

தமிழகத்தில் இன்னும் சில தினங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் சூறாவளியாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. அதில் தி.மு.க கடந்த பத்து ஆண்டுகளாக ஆட்சியில் இல்லாத காரணத்தினாலும், ஸ்டாலின் முதல்வர் வேட்பாளர் என்ற காரணத்தினாலும் தன் வாழ்நாள் உழைப்பை இந்த பிரச்சாரத்தில் குடுத்து வருகிறது ஆனால் அதற்காக சாதாரண மக்களை பதவி வெறியில் பிரச்சாரத்திற்காக கொண்டு செல்லும் வழியில் விபத்து ஏற்பட்டுள்ளது.


திட்டக்குடி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க வேட்பாளர் கணேசன் அவர்களுக்காக ஒரு சிறிய வண்டியான டாட்டா ஏஸ்'ல் வாக்கு சேகரிக்க (TATA Ace) வண்டியில் 40-க்கும் மேற்பட்டோர் பயணம் செய்ய வைத்து தி.மு.க'வினர் மனசாட்சி இல்லாமல் அழைத்து சென்றனர். வண்டியில் செல்லும் வழியில் புலிகரும்பூர் தாண்டி ஒரங்கூர் என்ற ஊரில் வண்டி கவிழ்ந்தது. வண்டிக்கு தலா 40பேர் வீதம் இரண்டு வண்டியில் சுமார் 80க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர்.

இதில் ஒரு வண்டி பாரம் தாங்காமல் கவிழ்ந்ததால் வண்டியில் பிரயாணம் செய்த 35 பேருக்கு கடும் காயம் ஏற்பட்டது. அவர்கள் அனைவரும் தொழுதூர் அரசு மருத்துவமனையில் சிகிசசைக்காக அனுமதிக்கப்பட்டடு உள்ளார்கள். மேலும் 9 பேருக்கு மிக பலத்த காயம் ஏற்பட்டது இவர்கள் அனைவரும் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.இப்படி சிறிய வாகனம் என்று கூட பார்க்காமல் மக்களை ஆட்டு மந்தைகள் மாதிரி அழைத்து சென்ற தி.மு.க'வினர் செயலை அனைவரும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.


அ.தி.மு.க'வோ அல்லது பா.ஜ.க போன்ன பிற கட்சிகளில் ஏற்படும் சிறிய எதார்த்தமான செயல்களை கூட ஊதி பெரிதாக்கி பிரச்சாரம் செய்யும் தி.மு.க'வினர் இந்த செயலை வழக்கம் போல் கண்டுகொள்ளாமல் "ஸ்டாலினதான் வராரு, விடியல் தர போராரு" என பதவி வெறியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News