Kathir News
Begin typing your search above and press return to search.

கல்லறை திருநாள் கொண்டாட அனுமதித்த தி.மு.க அரசு வரும் 4'ம் தேதி பழனி கந்தஷஷ்டி விழாவிற்கு அனுமதிக்குமா என பக்தர்கள் எதிர்பார்ப்பு?

கல்லறை திருநாள் கொண்டாட அனுமதித்த தி.மு.க அரசு வரும் 4ம் தேதி பழனி கந்தஷஷ்டி விழாவிற்கு அனுமதிக்குமா என பக்தர்கள் எதிர்பார்ப்பு?
X

Mohan RajBy : Mohan Raj

  |  2 Nov 2021 8:00 PM IST

இன்று கல்லறை திருநாள் அனுசரிக்க அனுமதியளித்த தி.மு.க அரசு வரும் 4'ம் தேதி பழனியில் கந்தஷஷ்டி விழா கொண்டாட இந்துக்களை அனுமதிக்குமா என கேள்வி எழுந்துள்ளது.



அறுபடை வீடுகளில் 3'ம் படை வீடான பழனியில் நடக்கும் முக்கிய திருவிழாக்களில் கந்தசஷ்டி விழாவும் ஒன்று. கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு நடந்த கந்தசஷ்டி விழாவில் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை, இந்நிலையில் பழனியில் கந்தசஷ்டி விழா வருகிற 4'ம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்குகிறது. 9'ம் தேதி பராசக்தி அம்மனிடம் வேல் பெற்று சூரனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் பழனி கிரிவீதியில் நடைபெறும். மறுநாள் 10'ம் தேதியன்று மலைக்கோவிலில் முத்துக்குமார சாமி, வள்ளி தெய்வானை திருக்கல்யாணம் நடைபெறும் என பழனிமலை கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கொரோனோ தொற்று குறந்து வரும் வேளையில் பக்தர்கள் இந்த விழாவிற்கு வர அனுமதிக்கப்படுவார்களா இல்லை கடந்த ஆண்டைப்போல அனுமதிக்கப்பட மாட்டார்களா என்ற சந்தேகம் பக்தர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இதற்கிடையில் உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் ஆண்டுதோறும் நவம்பர் 2-ந்தேதியை இறந்தவர்கள் நினைவு நாளாக கடைப்பிடிக்கிறார்கள். இறந்துபோன தங்கள் உறவினர்கள் மற்றும் முன்னோர்களுக்கு அன்று மலர் அஞ்சலி செலுத்துவார்கள். அந்ந நாளான இன்று கிருஸ்துவர்கள் இன்று கல்லறை திருநாள் அனுசரித்தனர். அதற்கு தமிழகமெங்கும் எந்த தடையும் விதிக்கப்படவில்லை, அதேபோல் பழனி கந்தஷஷ்டி விழாவிற்கு தி.மு.க அரசு தடை விதிக்காமல் இருக்குமா என பக்தர்கள் எதிர்பார்ப்பாக இருக்கிறது.


Source - Maalai malar

Next Story
கதிர் தொகுப்பு
Trending News