கொரோனோ அலையை சமாளிக்க முடியாமல் கேரளா திணறல் - நேற்று புதிய உச்சம் தொட்ட கொரோனோ எண்ணிக்கை ஒரே நாளில் 43529 பேர்!

கேரளா'வை பாருங்கள், கேரளா அரசின் நடவடிக்கையை பாருங்கள் என ஊடகங்களுக்கும், எதிர்கட்சிகளும் கடந்த ஆட்சி காலத்தில் கேரளத்தை புகழ்ந்து பேசி வந்தனர். ஆனால் நிலைமையோ தலைகீழ், கொரோனோ இரண்டாம் அலையை சமாளிக்க முடியாமல் கேரளம் திணறி வருகிறது. நாளுக்கு நாள் கொரோனோ நோயாளிகளின் எண்ணிக்கை கட்டுக்கடங்காமல் சென்று வருகிறது. நேற்று மட்டும் 43,529 பேருக்கு கொரோனோ உறுதிசெய்யப்பட்டுள்ளது.
கேரளாவில் நாள்தோறும் கொரோனா பாதிப்பு கிடுகிடு வென்று உயர்ந்து செல்கிறது. இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் 43 ஆயிரத்து 529 பேருக்கு தொற்று உறுதியாகி, உச்ச பச்ச பாதிப்பாக பதிவாகி உள்ளது. ஒரே நாளில் 95 பேர் பலியாகி உள்ளனர். இதுவரை அங்கு 19 லட்சத்து 80 ஆயிரத்து 879 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். மொத்தம் 6 ஆயிரத்து 53 பேர் இறந்துள்ளனர்.
நேற்று மட்டும் 34 ஆயிரத்து 600 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதுவரை 15 லட்சத்து 71 ஆயிரத்து 738 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு உள்ளனர். எர்ணாகுளத்தில் மட்டும் நேற்று 6 ஆயிரத்து 410 பேரும், மலப்புரத்தில் 5 ஆயிரத்து 388 பேரும், கோழிக்கோட்டில் 4
ஆயிரத்து 418 பேரும், திருவனந்தபுரத்தில் 4 ஆயிரத்து 284 பேரும் பாதிக்கப்பட்டு உள்ளனர். நேற்றைய பாதிப்புகளில் 241 பேர் மாநிலத்திற்கு வெளியில் இருந்து வந்தவர்களாவர்.