பாஜகவின் புதிய தலைவராக 46 வயதுடைய நிதின் நபின் பதவியேற்பு!!

By : G Pradeep
46 வயதான நிதின் நபின் பாஜகவின் தேசியத் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். பாஜக தேசியத் தலைவரை தேர்வு செய்யும் தேர்தலில் நிதின் நபின் மட்டுமே வேட்பு மனு தாக்கல் செய்தார்.
இதனால் அவர் போட்டியின்றி ஒருமனதாக பாஜகவின் புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். நிதின் நபினுக்கு ஆதரவாக 37 செட் வேட்புமனுக்கள் பெறப்பட்டதைத் தொடர்ந்து, பாஜக தேசியத் தலைவர் பதவிக்கு அவர் பெயர் முன்மொழியப்பட்டுள்ளதாக பாஜக தலைவர் கே. லட்சுமணன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
பீகார் மாநிலத்தை சேர்ந்த நிதின் நபின், பாஜக தலைவராக இருந்த நவீன் கிஷோர் பிரசாத் சின்காவின் மகன் ஆவார். தந்தையின் மறைவுக்கு பிறகு பெரிய முகமாக மாறிய நிதின் நபின் பீகாரின் பாட்னா சாஹிப் சட்டப்பேரவை தொகுதியில் பலமுறை வெற்றி கண்டார்.
இளம் வயதில் அமைச்சராக திறம்பட பணியாற்றியுள்ள நிதின் நபின், சத்தீஸ்கர் மாநில பாஜகவின் பொறுப்பாளராக இருந்தார். பீகாரில் காங்கிரசை வீழ்த்தி பாஜக அமோக வெற்றி பெற முக்கிய காரணமாக விளங்கினார்.
