Kathir News
Begin typing your search above and press return to search.

தொடர்ச்சியாக 5 முறையாக குற்றவாளியாக தண்டனையை பெற்று சாதனை நிகழ்த்தும் லாலு

தொடர்ச்சியாக 5 முறையாக குற்றவாளியாக தண்டனையை பெற்று சாதனை நிகழ்த்தும் லாலு

Mohan RajBy : Mohan Raj

  |  15 Feb 2022 10:15 AM GMT

ராஞ்சியில் உள்ள டோராண்டா கருவூல வழக்கில் ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ் குற்றவாளி என சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.


லாலு பிரசாத் யாதவ மீதான ஐந்தாவது மற்றும் மிகப்பெரிய கால்நடை தீவன ஊழல் வழக்கு இதுவாகும், அதே நேரத்தில் கடந்த 2013'ம் ஆண்டு முதல் கால்நடை தீவன ஊழல் தொடர்பான கடந்த நான்கு நடைபெற்ற வழக்குகளில் அவர் ஏற்கனவே தொடர்ச்சியாக தண்டனை பெற்றுள்ளார் இது 5வது முறையாகும்.


இதுவரை சி.பி.ஐ 64 வழக்குகளை பதிவு செய்துள்ளது அதில் 6 பேர் லாலு பிரசாத் யாதவ் உடன் தொடர்பு உடையவர்கள். அதில் 5 ஜார்கண்ட் மாநில அதிகார வரம்பிற்கு மாற்றப்பட்டன, இதுவரை நான்கு முறை குற்றவாளி என லாலு பிரசாத் யாதவ் மீது நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.


முதன்முறையாக செப்டம்பர் 30ஆம் தேதி 2013 அன்று லாலு பிரசாத் யாதவ் சாய்ஷா கருவூல வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்டார், இந்த வழக்கில் 37.70 கோடி ரூபாய் அவர் ஊழல் செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட நிலையில் தகுதி நீக்கம் செய்யப்பட்டு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.


மீண்டும் 2017'ம் ஆண்டு டிசம்பரில் லாலு பிரசாத் யாதவ் 1000 கோடி ரூபாய் பணத்தை மோசடி செய்தது தொடர்பான புகாரில் ஈடுபட்டதற்காக மீண்டும் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டார், இந்த வழக்கில் லாலுவுக்கு 42 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் ஆறு மாதங்களுக்குள் ஜாமினில் வெளிவந்தார்.


மீண்டும் அடுத்தபடியாக ஜனவரி 2018 லாலுவுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது, அதே ஆண்டு மார்ச் மாதம் சிறப்பு நீதிமன்றம் அவர் சட்டவிரோதமாக பல கோடியைத் கருவூலத்திலிருந்து பெற்றுக் கொண்டது தொடர்பாக 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது இப்பொழுது விதிக்கப்பட்டிருப்பது ஐந்தாவது முறையாக சிறைத்தண்டனை ஆகும்.



Source - OpIndia.com

Next Story
கதிர் தொகுப்பு
Trending News