Kathir News
Begin typing your search above and press return to search.

இன்னும் 5 மாசம்தான் இருக்கு..! கிடைத்த அதிர்ச்சி தகவலால் அறிவாலயம் செய்யப்போகும் காரியம்...!

இன்னும் 5 மாசம்தான் இருக்கு..! கிடைத்த அதிர்ச்சி தகவலால் அறிவாலயம் செய்யப்போகும் காரியம்...!
X

Mohan RajBy : Mohan Raj

  |  3 Oct 2023 10:14 AM GMT

உடன்பிறப்புகளே...! அலறியடித்து திமுக தலைமை வெளியிட்ட அறிவிப்பு...!

நாடாளுமன்றத் தேர்தலாக இருந்தாலும் சரி சட்டமன்ற தேர்தலாக இருந்தாலும் சரி அந்த தேர்தலுக்காக தயாராகிக் கொண்டிருக்கின்ற காலத்திலும் வேட்பாளர்கள் நியமிக்கப்பட்டு பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டிருக்கும் காலங்களிலும் திடீர் திருப்பங்கள் என்பது அரசியலில் நடைபெற்று வருகின்ற ஒன்று! அந்த வகையில் தற்போது தமிழக அரசியலில் ஒரு மாற்றம் ஏற்பட்டுள்ளது அதாவது அதிமுக பாஜக இடையில் இருந்த கூட்டணி உடைசல் சில கட்சியினருக்கு மகிழ்ச்சியையும் சில கட்சியினருக்கு அதிர்ச்சியும் கொடுத்துள்ளது.

இருப்பினும் தற்போது இந்த நிலை திமுகவிற்கு நெருக்கடியை ஏற்படுத்தும் என்று விமர்சகர்களால் விமர்சிக்கப்படுகிறது. ஏனென்றால் திமுக அதிமுக என்ற இரு பெரும் கட்சிகளில் அதிமுக பாஜகவுடன் இணைந்துவிட்டது பாஜகவுடன் இணைந்த ஒரே காரணத்திற்காக அதிமுகவில் சேராமல் இருந்த சில கட்சிகள் திமுகவில் சேர்ந்தனர்

ஆனால் தற்போது அதிமுக பாஜகவில் இருந்து விலகியதால் திமுகவின் கூட்டணி கட்சிகளுக்கு மற்றுமொரு வாய்ப்பு அல்லது மாற்றுக் கூட்டணியில் இருப்பதற்கான ஒரு சூழ்நிலையும் தற்போது அமைந்துள்ளது. இந்த திடீர் மாற்றத்தினால் தன்னுடைய கூட்டணி கட்சிகள் பிற கட்சிகளுடன் இணைய வாய்ப்பு இருக்கிறது என்பதை திமுக தலைமை நன்கு அறிந்து கொண்டது.

இந்த நிலையில் தென் மாவட்டங்களில் தனது பலத்தை இழந்து இருக்கும் நிலையை உணர்ந்த அதிமுக மற்ற கட்சிகளுடன் கூட்டணி வைப்பதற்கான முயற்சிகளிலும் ஈடுபட்டு வருகிறது அதே சமயத்தில் திமுகவின் கூட்டணியில் இருக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சி அதிமுகவில் இணைவதற்காக முனைப்பு காட்டி வருகின்ற செய்தியும் அரசியல் வட்டாரங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த செய்தி திமுக தலைமையான அறிவாலயத்திற்கு சென்ற காரணத்தினால் தனது இரண்டாம் கட்ட அமைச்சர்கள் உடன் கலந்தாலோசித்து கூட்டணி கட்சிகள் கேட்கும் நிபந்தனைகள் மற்றும் தொகுதிக்கான சீட்டுகளை அவர்களுக்கு வழங்க வேண்டும் ஏனென்றால் இந்த தேர்தல் நமக்கு மிகவும் முக்கியமான தேர்தல் ஒரு பக்கம் பாஜக தமிழகத்தில் அதிகமாக வளர்ந்து விட்டது இன்னும் வளர்ந்து கொண்டு வருகிறது. இருந்தாலும் தனது கூட்டணி கட்சிகள் பாஜகவில் சேர்வதற்கான வாய்ப்பு இல்லை என்றாலும் மறுபக்கம் அதிமுகவில் இணைவதற்கான வாய்ப்புகளும் அது குறித்த செய்திகளும் தான் தற்போது என் காதுகளுக்கு வருகிறது இதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதற்காக நாளை காலை 10:30 மணி அளவில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்ட செயலாளர்கள் மற்றும் தலைமை கழகத்தால் நியமிக்கப்பட்ட தொகுதி பார்வையாளர்களின் கலந்தாலோசனைக் கூட்டம் காணொளி காட்சி வாயிலாக நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

மேலும் தற்போது கட்சியில் பிரச்சனைகள் அதிகமாக இருக்கிறது என்ற காரணத்தினாலும் வேட்பாளர்களாக யாரை தேர்வு செய்யலாம் என்பது குறித்து ஒரு பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், வரும் தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு பல கட்சிகள் செல்லும் என்பதாலும் பாஜக வேறு வலுப்பற்று வருகிறது என்பதாலும் இவை அனைத்தையும் சமாளிக்க எப்பாடு பட்டாவது உழைக்க வேண்டும், வாழ்வா சாவா தேர்தல் இது!! என மாவட்டச் செயலாளர்களுக்கு அறிவுரைத்த இந்த கூட்டம் நடத்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

மேலும் இந்த கூட்டத்தில் தேர்தலை சந்திக்க இன்னும் 5 மாதங்களே இருக்கும் நிலையில் உட்கட்சி பிரச்சினையில் எதுவும் கட்சிக்காரர்கள் ஈடுபடக்கூடாது, அவரவர்கள் அவர்கள் தொகுதி வேலையை மட்டும் பார்க்கவேண்டும், எக்காரணம் கொண்டும் தொகுதியில் திமுக வேலைகள் பின்னடைவை சந்திக்க கூடாது என திமுக தலைமை கட்டளையிட திட்டமிட்டுள்ளதாம். இதற்க்கு சமீபத்தில் நடந்த திமுக உட்கட்சி சண்டைகளும் காரணம் என கூறப்படுகிறது...

Next Story
கதிர் தொகுப்பு
Trending News