பிரதமர் மோடியின் ஆட்சியில் சூரிய மின்சக்தி விமானநிலையங்கள் 50 ஆக அதிகரிப்பு.!
By : Parthasarathy
பாரத பிரதமர் நரேந்திர மோடி ஆட்சி பொறுப்பில் அமர்ந்து ஏழு ஆண்டுகள் முடிவடைந்த நிலையில் பா.ஜ.க அதை "#7yearsofseva" என்று ட்விட்டரில் பதிவிட்டு பாஜக அரசின் சாதனைகளை விளக்கி வருகின்றனர். இந்த கொரோனா காலத்தில் மக்களுக்கு பல நலத்திட்ட உதவிகளை பா.ஜ.க-வின் தொண்டர்கள் செய்து வருகின்றனர். அது மட்டுமின்றி இந்த ஏழு ஆண்டுகளில் மோடி அவர்கள் செய்த சாதனைகள் மற்றும் தொலைநோக்கு திட்டங்களையும் பதிவிட்டு வருகின்றனர்.
அந்த வகையில் சூரிய மின்சக்தியில் இயங்கும் விமான நிலையங்கள் காங்கிரஸ் ஆட்சியில் வெறும் ஏழு மட்டுமே இருந்த நிலையில், மோடி பொறுபேற்று இந்த ஏழு ஆண்டுகளில் அது 50 ஆக உயர்ந்துள்ளது. இந்த ஏழு ஆண்டுகளில் சுமார் 15 மடங்கு இந்த சூரிய மின்சக்தி விமானநிலையங்கள் அதிகரித்துள்ளது.
பிரதமர் மோடி அவர்களின் தொலைநோக்கு திட்டங்களால் கடந்த 6 ஆண்டுகளில் சூரியசக்தியில் இயங்கும் விமான நிலையங்கள் 7லில் இருந்து 50 ஆக அதிகரித்துள்ளது.#7YearsOfSeva pic.twitter.com/CqHgaPll2Y
— BJP Tamilnadu (@BJP4TamilNadu) June 10, 2021
இது குறித்து தமிழக பா.ஜ.க தனது ட்விட்டர் பக்கத்தில் கூறும்போது "பிரதமர் மோடி அவர்களின் தொலைநோக்கு திட்டங்களால் கடந்த 6 ஆண்டுகளில் சூரியசக்தியில் இயங்கும் விமான நிலையங்கள் 7லில் இருந்து 50 ஆக அதிகரித்துள்ளது." என்று அதில் தெரிவித்துள்ளது.