Kathir News
Begin typing your search above and press return to search.

தஞ்சை மதமாற்றம் கொடுமையால் சிறுமிக்கு நியாயம் கேட்டு போராடிய பா.ஜ.க'வினர் 500 பேரை கைது செய்த தி.மு.க அரசு

தஞ்சை மதமாற்றம் கொடுமையால் சிறுமிக்கு நியாயம் கேட்டு போராடிய பா.ஜ.கவினர் 500 பேரை கைது செய்த தி.மு.க அரசு

Mohan RajBy : Mohan Raj

  |  23 Jan 2022 9:15 AM GMT

தஞ்சையில் கிருஸ்துவ மதமாற்றம் குறித்தி நீதி கேட்டு போராடிய பா.ஜ.க'வின் நிர்வாகிகள் உட்பட 500 பேரை கைது செய்தது தி.மு.க அரசு.


அரியலூர் மாவட்டம் திரு மானூர் ஒன்றியம் வடுகர்பாளையத்தை சேர்ந்த முருகானந்தம் என்பவரின் 17 வயது மகள் தஞ்சை மாவட்டம் திருக் காட்டுப்பள்ளியை அடுத்த மைக்கேல்பட்டியில் உள்ள தூய இருதய மேல்நிலைப்பள் ளியில் பிளஸ்-2 படித்து வந்த இவர், விஷம் குடித்து தற் கொலை செய்து கொண் டார். தன்னை மதம் மாற்ற வற்புறுத்தியதாக மரண வாக்குமூலம் வீடியோவில் கொடுத்துவிட்டு சிறுமி தற்கொலை செய்துள்ளார்.

இந்நிலையில் இவரது மரணம் குறித்த வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடக்கோரியும், கட்டாய மதமாற்றத்தினால் உயிரிழந்த லாவண்யா குடும்பத்துக்கு இழப்பீடு தொகையாக ரூ.1கோடி வழங்கக்கோரியும், மாணவியின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வலியுறுத்தியும், கட்டாய மதமாற்றம் தடை சட்டத்தை தமிழக அரசு கொண்டு வரக்கோரியும் தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என பா.ஜ.க.வினர் அறிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதன்படி கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பா.ஜ.க மாநில துணைத் தலைவர் கருப்பு முருகானந்தம் தலைமை தாங்கினார். தெற்கு மாவட்ட தலைவர் பண்ணவயல் இளங்கோ, மாவட்ட பொதுச் செயலாளர் ஜெய்சதீஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் பா.ஜ.க. மூத்த தலைவர் எச்.ராஜா, இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், விசுவ இந்து பரிஷத் மாநில பொறுப்பாளர் சேதுராமன், பா.ஜ.க மாநில இளைஞரணி தலைவர் வினோஜ் செல்வம், மாநில மகளிரணி தலைவி மீனாட்சி, ஜெயலட்சுமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பா.ஜ.க நிர்வாகிகள் மற்றும் பா.ஜ.க'வினர் 500 பேரை கைது செய்தது தி.மு.க அரசு. இதனால் தஞ்சையில் நேற்று பரபரப்பு ஏற்பட்டது.


Source - தினத்தந்தி





Next Story
கதிர் தொகுப்பு
Trending News