Kathir News
Begin typing your search above and press return to search.

"யப்பா 53% கமிஷன் கேட்டா நாங்க எங்க போறது?" - அலறும் தாம்பரம் ஒப்பந்தக்காரர்கள், அவதியில் மக்கள்

யப்பா 53% கமிஷன் கேட்டா நாங்க எங்க போறது? - அலறும் தாம்பரம் ஒப்பந்தக்காரர்கள், அவதியில் மக்கள்

Mohan RajBy : Mohan Raj

  |  24 Jan 2022 10:30 AM GMT

மழையால் சேதமடைந்த சாலைகளை சீரமைக்க 53 சதவிகிதம் வரை கமிஷன் தொகை கேட்பதால் ஒப்பந்தக்காரர்கள் கதறுகின்றனர்.

கடந்த அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் தமிழகத்தில் கடுமையான மழை பெய்ததினால் சாலைகள் சேதமடைந்தன. குறிப்பாக சென்னை போன்ன போக்குவரத்து நெரிசல் மிகுந்த மாநகரங்களில் சாலைகள் வாகனங்கள் செல்ல இயலாத அளவிற்கு மோசமானதாக சேதமடைந்தன. அவற்றை சரி செய்ய ஒப்பந்தங்கள் அரசு தரப்பில் ஒதுக்கப்பட்டாலும் சரி செய்ய ஒப்பந்தக்காரர்கள் முனவருவதில்லை, இதற்கு காரணமாக 53 சதவிகிதம் கமிஷன் கேட்கப்படுவதால் ஒப்பந்தக்காரர்கள் சாலையை சீரமைக்கும் பணியை செய்ய முனவருவதில்லை என தாம்பரம் பகுதியில் புகார் எழுந்துள்ளது.

இது தொடர்பாக தாம்பரத்தில் உள்ள சில ஒப்பந்தக்காரர்கள் கூறும்போது, "சாலை தரத்துடன் அமைக்க நாங்கள் தயாராக இருக்கிறோம், ஆனால் ஒரு லட்சம் மதிப்புள்ள சாலை அமைக்க 55 ஆயிரம் வரை கமிஷன் கேட்கிறார்கள். விலைவாசியும் உயர்ந்துவிட்டது. இதனால் தரமான சாலைகள் அமைக்க முடியவில்லை. மேலும் தாம்பரம் மாநகராட்சியில் பல ஒப்பந்தங்களுக்கு 25 கோடிக்கு மேல் பாக்கி வைத்துள்ளது. இதனால் நாங்கள் கடன் சுமையில் உள்ளோம். கமிஷன் கொடுத்து தரமான சாலைகள் அமைப்பதற்கு எங்களால் இயலவில்லை எனவே நாங்கள் பணிகளை செய்ய தயங்குகிறோம்" என கூறினார்கள் ஓப்பந்தக்காரர்கள்.

கடந்த வாரம்தான் சாலைப்பணிகள் தரமாக நடக்கிறதா, பயன்படுத்தும் பொருள்கள் தரமானதாக இருக்கிறதா என தலைமைச்செயலாளர் வே.இறையண்பு பார்வையிட்டார் என்பது குறிப்பிடதக்கது.


Source - Tamil The Hindu

Next Story
கதிர் தொகுப்பு
Trending News