கடந்த தேர்தலை விட தி.மு.க கூட்டணி பெற்ற வாக்கு 5.64% குறைவுதான்.. பா.ஜ.கவின் பாய்ச்சல்..
By : Bharathi Latha
39 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வாகை சூடியிருந்தாலும் இந்தத் தேர்தலில் பாஜகவின் வாக்கு சதவீதம் மிகுந்த கவனம் பெறுகிறது. தாமரை மலராவிட்டாலும் விதை வலுவாக இடப்பட்டதாக அக்கட்சியினர் பெருமை கொண்டு இருக்கிறார்கள். குறிப்பாக தமிழகத்தின் பாஜக மலரவே கூடாது என்று எதிர்பார்த்த திமுகவினருக்கு இது பதிலடி ஆகத்தான் அமைந்து இருக்கிறது. எனவே தனித்துப் போட்டியிட்டு அவர்கள் மூன்றாம் இடத்திற்கு முன்னேறி இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்க வேண்டிய விஷயம்.
அதே நேரத்தில் கடந்த 2019-ம் ஆண்டு மக்களவை தேர்தலைவிட, இந்த தேர்தலில் திமுக கூட்டணி மட்டுமல்லாது தனிப்பட்ட முறையில் கூட்டணியில் உள்ள கட்சிகளின் வாக்கு சதவீதமும் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. தனிப்பட்ட வகையில் இந்த தேர்தல் திமுகவுக்கு ஒரு சரிவை தான் கொடுத்து இருக்கிறது. கடந்த 2019 மக்களவைத் தேர்தலில், திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட 8 கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. அப்போது, 38 தொகுதிகளில் வெற்றி பெற்று, 53 சதவீதம் வாக்குகளைப் பெற்றது. இந்த தேர்தலிலும் 8 கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. இறுதி நிலவரப்படி, திமுக கூட்டணி 46.97 சதவீதம் வாக்குகளை பெற்றது.
அதேபோல், தனிப்பட்ட முறையில் கடந்த 2019-ல் 33.53% வாக்குகள் பெற்ற திமுக, இந்த தேர்தலில் வெறும் 26.93% பெற்றுள்ளது. இதன் காரணமாக கடந்த தேர்தலை விட இந்த தேர்தலில் திமுக கூட்டணி பெற்ற வாக்குகள் 5.64 சதவீதம் குறைவுதான் என்பதை அவர்கள் நினைவில் கொள்ள வேண்டும். அதுபோல் இந்த தேர்தல் 2014-ல் பா.ஜ.கவின் வாக்கு சதவீதம் 5.56%, 2019-ல் 3.62% என்றிருந்த நிலையில் ஒரே பாய்ச்சலாக இம்முறை 11.24% ஆக அதிகரித்துள்ளது.
Input & Image courtesy: News