துரைமுருகனுக்கு அடுத்தடுத்து விழுந்த இடி:6 மாதத்தில் வழக்கை முடிக்க சென்னை ஐகோர்ட் உத்தரவு!

By : Sushmitha
1996-2001 ஆண்டி பொதுப்பணித்துறை அமைச்சராக பதவி வகித்த தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அப்பொழுது வருமானத்திற்கு அதிகமாக சொத்து செய்ததாக 2002 இல் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்தது
இந்த வழக்கில் இருந்து அமைச்சர் துரைமுருகன் மற்றும் அவரது குடும்பத்தினர் விடுவிக்கப்பட்டனர் ஆனால் நேற்று ஏப்ரல் 23 இந்த வழக்கிலிருந்து அமைச்சர் துரைமுருகன் மற்றும் அவரது குடும்பத்தினர் விடுவிக்கப்பட்ட உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து இந்த வழக்கை ஆறு மாதங்களுக்குள் விசாரித்து முடிக்க வேண்டும் என்று வேலூர் சிறப்பு நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டது
இந்த நிலையில் 2007-2009 ஆண்டு வரை பொதுப்பணித்துறை அமைச்சராக பதவி விகித்த காலத்தில் ரூபாய் 1.40 கோடி வருமானத்திற்கு அதிகமான சொத்து சேர்த்ததாக பதியப்பட்ட வழக்கிலிருந்து 2017 இல் வேலூர் நீதிமன்றம் அமைச்சர் துரைமுருகனை விடுதலை செய்தது, ஆனால் மீண்டும் இன்று ஏப்ரல் 24 செத்துக்குவிப்பு வழக்கில் விடுவிக்கப்பட்ட மற்றும் ஒரு உத்தரவையும் சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது
