Kathir News
Begin typing your search above and press return to search.

மூன்றாம் தர பேச்சு - இன்று மாலை 6 மணி வரைக்கும் ஆ.ராசாவிற்கு கெடு விதித்த தேர்தல் ஆணையம்

மூன்றாம் தர பேச்சு - இன்று மாலை 6 மணி வரைக்கும் ஆ.ராசாவிற்கு கெடு விதித்த தேர்தல் ஆணையம்
X

Mohan RajBy : Mohan Raj

  |  31 March 2021 9:30 AM IST

பிரச்சாரத்தின் போது மூன்றாம் தரமாக பேசியதால் தி.மு.க எம்.பி ஆ.ராசாவிற்கு இன்று மாலை 6 மணிக்குள் விளக்கமளிக்க ஆ.ராசாவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

தி.மு.க துணைப் பொதுச் செயலாளரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஆ.ராசா சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் தி.மு.க வேட்பாளர் எழிலனை ஆதரித்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், கட்சியில் அடிமட்ட தொண்டராக இருந்து உழைத்து முதல்வர் வேட்பாளராக உயர்ந்தவர் மு.க ஸ்டாலின், அவர் முறையாக திருமணம் நடந்த தாய்க்கு முறையாக பிறந்த குழந்தை எனவும், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அப்படியல்ல, முதல்வராக இருந்த ஜெயலலிதாவின் மரணத்திற்குப் பின்னர் குறுக்கு வழியில் பதவிக்கு வந்தவர். அதாவது கள்ள உறவில் பிறந்த குழந்தை என ஆபாசமாக பேசினார்.

இதனை தொடர்ந்து ஆ.ராசா பிரசாரம் செய்ய தடை விதிக்க வேண்டும் என்று அதிமுக கடந்த 27-ம் தேதி புகார் அளித்தது.




தனிமனித விமர்சனம் என்பது தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு எதிரானது என்பதால் இது தொடர்பான அறிக்கையை இந்திய தேர்தல் ஆணையத்திற்குத் தமிழக தேர்தல் அதிகாரி சத்தியபிரதா சாகு அனுப்பியிருந்தார். இதனையடுத்து தேர்தல் ஆணையம் தற்போது நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இது தொடர்பாக உரிய விளக்கத்தை இன்று மாலை 6 மணிக்குள் அளிக்க வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உரிய விளக்கம் அளிக்கத் தவறும்பட்சத்தில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது

Next Story
கதிர் தொகுப்பு
Trending News