Kathir News
Begin typing your search above and press return to search.

இதுதான் அமித்ஷா ஸ்டைல்! 60 ஆண்டுகால மணிப்பூர் விவகாரத்தை ஜஸ்ட் லைக் தட் தட்டி தூக்கிய சாணக்கியன்....

இதுதான் அமித்ஷா ஸ்டைல்! 60 ஆண்டுகால மணிப்பூர் விவகாரத்தை ஜஸ்ட் லைக் தட் தட்டி தூக்கிய சாணக்கியன்....
X

Mohan RajBy : Mohan Raj

  |  1 Dec 2023 3:01 PM GMT

என்ன இருந்தாலும் சாணக்கியர் சாணக்கியர் தான்.... 60 ஆண்டுகால மணிப்பூர் போராட்டத்தை அசால்டாக முடித்து வைத்த அமித்ஷா....

மணிப்பூர் மாநிலத்தில் கடந்த 60 ஆண்டுகளாக அரசுக்கு எதிராக செயல்பட்டு வந்த பிரிவினைவாத அமைப்பான ஐக்கிய தேசிய விடுதலை முன்னணி அமைப்பினர் தற்பொழுது அமைதி பாதைக்கு திரும்புவதாக ஒப்புக்கொண்ட விவகாரம் தான் நாடு முழுவதும் பேசுபொருளாகியுள்ளது.

மணிப்பூரில் நீண்ட நாள் பிரச்சினையாக இந்த அமைப்பின் பிரிவினைவாத செயல்கள் இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது, குறிப்பாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு கூட மணிப்பூரில் ஏற்பட்ட கலவரம் அதனை தொடர்ந்து வெளியான வீடியோ அனைத்தும் நாடு முழுவதும் உள்ள எதிர்க்கட்சிகள் குறை கூற ஏதுவாக அமைந்தன. மணிப்பூரில் இவ்வளவு கலவரம் நடக்கிறது பிரதமர் மோடி ஏன் அங்கு செல்லவில்லை? மணிப்பூருக்காக நான் போராட வேண்டும்! மணிப்பூர் மக்களுக்கு அமைதி திரும்ப வேண்டும்! எனக் கூறி காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அரசுக்கு எதிராக போராட்டத்தை துவங்கின.

அப்பொழுதே மணிப்பூர் விவகாரம் மிகவும் தீவிரமாக பேசப்பட்டது, இன்னும் குறிப்பாக கூற வேண்டும் என்றால் மணிப்பூர் விவகாரத்தை கையில் எடுத்து வரும் நாடாளுமன்ற தேர்தல் வரை சென்று தேர்தலை சந்தித்து விடலாம் என சில அரசியல் கட்சிகள் கணக்கு போட்டதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் 60 ஆண்டுகளாக மணிப்பூர் தலைநகர் இம்பால் பள்ளத்தாக்கு பகுதியில் ஐக்கிய தேசிய விடுதலை முன்னணி இடம் அமைப்பினர் செயல்பட்டு வந்த நிலையில் மணிப்பூர் மாநிலத்தில் ஆயுத குழுவாகவும் இவர்கள் இருந்து வந்தார்கள்.

எந்த பேச்சுவார்த்தை நடத்தினாலும் மத்திய, மாநில அரசுகளுக்கு இவர்கள் கட்டுப்படுவதாக இல்லை, இந்த நிலையில் இம்பாலில் நடந்த அரசியல் அமைப்பு தின விழாவில் மணிப்பூர் முதல்வர் பைரன்சிங் பேசும் பொழுது கூறிய வார்த்தைகள் தற்பொழுது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

அவர் பேசும் பொழுது UNLF அமைப்பு உடனான பேச்சுவார்த்தை சமூகமான நிலையில் இருப்பதாக தெரிவித்தார் மேலும் அவர் பேசும் பொழுது UNLF அமைப்புடன் அமைதி ஒப்பந்தம் டெல்லியில் கையெழுத்தாகி உள்ளது, இதன் மூலம் UNLF அமைப்பு ஆயுதம் ஏந்தி போராடுவதை கைவிட்டு விடுவதாக மாநில அரசுடன் இணக்கமாக செல்ல ஒப்புக்கொண்டுள்ளது. அதோடு அளந்த குழுவை சேர்ந்தவர்கள் ஆயுதங்களை ஒப்படைத்துள்ளனர், இது மணிப்பூர் வரலாற்றின் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது' என கூறினார் பைரன் சிங்.

இது பற்றி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தனது எக்ஸ் பக்கத்தில் 'இது வரலாற்றின் முக்கிய நிகழ்வு, வடகிழக்கு பகுதிகள் நிரந்தரமாக அமைதியை நிலைநாட்ட மோடி அரசு இடைவிடாத முயற்சியுடன் மேற்கொண்டு வருகிறது. அதன்படி UNLF அமைப்பு அமைதிக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்துள்ளது என பெருமிதமாக குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் குறிப்பிடும் பொழுது 'இது புதிய அத்தியாயமாகும், மணிப்போர் மாநில ஆயுத குழுவான UNLF வன்முறையை கைவிட்டு அரசுடன் சேர்ந்து பயணிக்க ஒப்புக்கொண்டுள்ளது. அவர்களை ஜனநாயக செயல்முறையை வரவேற்கிறேன், அமைதி மற்றும் முன்னேற்றத்திற்கு அவர்களின் பயணம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்' என தெரிவித்துள்ளார்.

இவ்வளவு காலமாக மணிப்பூரை வைத்து அரசியல் செய்து வந்த எதிர்க்கட்சிகளுக்கு இது பேரிடியாக விழுந்துவிட்டது. இனி மணிப்பூரை வைத்து அரசியல் செய்ய முடியாது, மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் என்ன செய்தார் என கேட்க முடியாத அளவிற்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா எதிர்க்கட்சிகள் முகத்தில் கரியை பூசி விட்டார் எனவும் விமர்சனங்கள் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News