Kathir News
Begin typing your search above and press return to search.

அம்பேத்கரின் 65 வது நினைவு நாள்: பா.ஜ.க. நிர்வாகிகள் நடைபயணம் மேற்கொண்டு மரியாதை!

அண்ணல் பாபாசாகேப் அம்பேத்கரின் 65வது நினைவு நாள் இன்று நாடு முழுவதும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. டெல்லியில் பிரதமர் மோடி மற்றும் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு உள்ளிட்ட தலைவர்களும் மலர்த்தூவி மரியாதை செலுத்தினர்.

அம்பேத்கரின் 65 வது நினைவு நாள்: பா.ஜ.க. நிர்வாகிகள் நடைபயணம் மேற்கொண்டு மரியாதை!
X

ThangaveluBy : Thangavelu

  |  6 Dec 2021 11:16 AM GMT

அண்ணல் பாபாசாகேப் அம்பேத்கரின் 65வது நினைவு நாள் இன்று நாடு முழுவதும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. டெல்லியில் பிரதமர் மோடி மற்றும் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு உள்ளிட்ட தலைவர்களும் மலர்த்தூவி மரியாதை செலுத்தினர்.

இதே போன்று சென்னையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் அக்கட்சியின் தொண்டர்கள் மற்றும் அம்பேத்கரின் உருவப்படத்தை தோளில் சுமந்து சென்றனர். இந்த நிகழ்வில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு ஊர்வலமாக சென்றார். அதன் பின்னர் அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்ட அம்பேத்கர் உருவப்படத்திற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மலர்தூவி மரியாதை செலுத்தினார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசும்போது, அம்பேத்கர் நினைவு நாளில் பாஜக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் நடை பயணம் மேற்கொண்டு மரியாதை செலுத்தியுள்ளோம் என்றார்.

மேலும், பாஜக ஏன் அம்பேத்கரை கொண்டாடுகின்றனர் என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் பதில் அளித்து பேசும்போது, அம்பேத்கர் மத்திய பிரதேசத்தில் பிறந்தார். அதன் பின்னர் லண்டனில் படித்து பட்டம் பெற்றார். அம்பேத்கர் வாழ்ந்த 5 இடங்களை மத்திய அரசு மீட்டு நாட்டு மக்களுக்காக அர்ப்பணித்துள்ளது. அதில் லண்டனில் இருந்த வீட்டை பாஜக அரசு மீட்டுள்ளது.

மேலும், விசிக தலைவர் திருமாவளவன் மற்றும் கே.பாலகிருஷ்ணன் போன்றோர்கள் அம்பேத்கரை வைத்து வியாபாரம் (அரசியல்) செய்து வருகின்றனர். இந்தியாவின் குடியரசுத் தலைவராக ராம்நாத் கோவிந்தை பாஜக நியமித்துள்ளது. அவர் ஒரு பட்டியலின வகுப்பை சேர்ந்தவர் ஆவார். எனவே பாஜக ஒருபோதும் ஜாதியை வைத்து அரசியல் செய்வது இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Source: Dinamalar

Image Courtesy:Twiter

Next Story
கதிர் தொகுப்பு
Trending News