Kathir News
Begin typing your search above and press return to search.

தகாத வார்த்தையைப் பயன்படுத்திய காங்கிரஸ் எம்.எல்.ஏ 7 நாட்கள் சட்டசபையில் இருந்து சஸ்பெண்ட்

தகாத வார்த்தையைப் பயன்படுத்திய காங்கிரஸ் எம்.எல்.ஏ 7 நாட்கள் சட்டசபையில் இருந்து சஸ்பெண்ட்
X

Mohan RajBy : Mohan Raj

  |  7 March 2022 6:46 AM IST

குஜராத் மாநிலத்தில் சபையில் பயன்படுத்தக் கூடாத வார்த்தையைப் பயன்படுத்தியது காங்கிரஸ் எம்.எல்.ஏ பஞ்சாபாய் வான்ஷ் மக்களவையில் இருந்து 7 நாட்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.


குஜராத் மாநில சட்டசபையின் பட்ஜெட் கூட்டத் தொடர் மார்ச் 2-ஆம் தேதி தொடங்கியது. கூட்டத் தொடரின் மூன்றாவது நாளில் காங்கிரஸ் எம்.எல்.ஏ நௌஷாத் சோலங்கி ஒரு கேள்வியை கேட்டிருந்தார் அப்பொழுது அதற்கு திருப்திகரமான பதில் கிடைக்கவில்லை எனக் கூறி அவர் தனது இருக்கையை விட்டு வெளியேறி சட்டசபையின் தரையில் அமர்ந்தார்.


நௌஷாத் சோலங்கியின் இந்த நடத்தைக்கு மாநில உள்துறை அமைச்சர் ஹர்ஷ் சங்கவி எதிர்ப்பு தெரிவித்ததுடன் இதுபோன்ற ஆணவத்தை பொறுத்துக்கொள்ள முடியாது எனக்கூறினார், இதையடுத்து காங்கிரஸ் எம்.எல்.ஏ'க்கள் சட்டசபையில் அமளியில் ஈடுபட்டனர் பின்னர் காங்கிரஸ் எம்.எல்.ஏ பஞ்சாபாய் வான்ஷ் மாநில உள்துறை அமைச்சர் ஹர்ஷ் சங்கவிக்கு எதிராக பயன்படுத்தக் கூடாத வார்த்தையான 'தபோரி' என்ற வார்த்தையைப் பயன்படுத்துகிறார் இதைக்கேட்ட வருவாய்த்துறை அமைச்சர் ராஜேந்திர திரிவேதி பஞ்சாப் வான்ஷை வாபஸ் பெற கூறினார்.


பின்னர் அங்கே கூச்சல் நிலவியது, ஆனால் காங்கிரஸ் எம்.எல்.ஏ பஞ்சாபாய் வான்ஷ் அவரது வார்த்தைகளை கூச்சல் எழுந்தததையடுத்து வாபஸ் பெற்றார். ஆனாலும் அவரை ஏழு நாட்களுக்கு சஸ்பெண்ட் செய்யும் யோசனையை பா.ஜ.க மாநிலங்களவை உறுப்பினர் பங்கஜ் தேசாய் முன்வைத்தார். இந்த முன்வைத்த கருத்து பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டது பின்னர் சட்டமன்றத்தில் சபாநாயகரால் அங்கீகரிக்கப்பட்டது. இதனால் காங்கிரஸ் எம்.எல்.ஏ பஞ்சாபாய் வான்ஷ் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தார்.


Source - OpIndia.com

Next Story
கதிர் தொகுப்பு
Trending News