ஜூன் 8 இல் மதுரைக்கு வரும் அமித் ஷா:சிறப்பான பதிலடி கொடுக்க போகும் பாஜக!

ஜூன் 8 ஆம் தேதி மதுரையில் பாஜக மாநில நிர்வாகிகள் பங்கேற்கும் தேர்தல் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது இதில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்க உள்ளதாகவும் கூறப்படுகிறது
முன்னதாக மதுரையில் கடந்த ஜூன் ஒன்றாம் தேதி திமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது அதில் நிறைவேற்றப்பட்ட 23 தீர்மானங்கள் மத்திய அரசுக்கு எதிரானவை ஆகும் அதோடு இந்த பொதுக்குழுவில் பேசிய திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் பாஜக மற்றும் அதிமுகவை நேரடியாக விமர்சனம் செய்திருந்தார் அதிலும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குறித்து முதல்வர் பேசியிருந்ததும் பாஜக வட்டாரத்தில் கடும் கோபத்தை ஏற்படுத்தியது
இதற்கான பதிலடி மதுரையிலேயே கொடுக்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் ஆலோசனைக் கூட்டத்தை நடத்த பாஜக முடிவு செய்துள்ளதாகவும் ஜூன் எட்டாம் தேதி மாலை 3 மணி அளவில் பாஜக மாநில மாவட்ட மற்றும் மண்டல நிர்வாகிகள் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளதாகவும் கூறப்படுகிறது