Kathir News
Begin typing your search above and press return to search.

பாக்ஸ் ஆபிஸை அடித்து நொறுக்கும் "தி காஷ்மீர் பைல்ஸ்" - இதுவரை 80 கோடி வசூல்

பாக்ஸ் ஆபிஸை அடித்து நொறுக்கும் தி காஷ்மீர் பைல்ஸ் - இதுவரை 80 கோடி வசூல்

Mohan RajBy : Mohan Raj

  |  17 March 2022 12:15 PM GMT

இயக்குனர் விவேக் அக்னிஹோத்ரி இயக்கிய "தி காஷ்மீர் ஃபைல்ஸ்" திரைப்படம் வெளியான ஆறு நாட்களில் 80 வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.


அனுபம் கேர் நடிப்பில் இயக்குனர் விவேக் அக்னிஹோத்ரி இயக்கி கடந்த வாரம் வெளியான "தி காஷ்மீர் ஃபைல்ஸ்" திரைப்படம் நாடு முழுவதும் பலத்த வரவேற்புடன், ரசிகர்கள் ஆதரவுடன் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.


1990-களில் காஷ்மீர் பள்ளத்தாக்கில் பண்டிட் இன மக்கள் திட்டமிட்டு கொல்லப்பட்டதை இந்த திரைப்படம் தத்ரூபமாக வடிவமைத்துள்ளது. இப்படத்தில் அனுபம் கேர், தர்ஷன் குமார், மிதுன் சக்ரவர்த்தி மற்றும் பலர் நடித்துள்ளனர். பல மறைக்கப்பட்ட உண்மைகளை வெளிக்கொண்டு வந்த இப்படத்திற்கு நாடு முழுவதும் பலத்த வரவேற்பு ஏற்பட்டுள்ளது பலர் இப்படத்தை பாராட்டி வருகின்றனர்.


மேலும் படம் வெளியான வெள்ளிக்கிழமை அன்று 3.55 கோடியும், சனிக்கிழமை அன்று 8.5 கோடியும், ஞாயிற்றுக்கிழமை 15.1 கோடியும் என முதல் மூன்று நாட்கள் வசூலை வாரி குவித்தது. அதன்பிறகு இதுவரை "தி காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படம் 80 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் சாதனை புரிந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது, மேலும் படம் திரையிடப்படும் திரையரங்குகளின் எண்ணிக்கை அதிகரிக்கபடுவதால் இன்னும் அதிகமாக பணம் வசூல் செய்யலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.



Source - Swarajya



Next Story
கதிர் தொகுப்பு
Trending News