Kathir News
Begin typing your search above and press return to search.

கடனில் தமிழகம் தத்தளிக்கும் நிலையில், கடலில் 81 கோடியில் பேனா சிலை தேவையா? - கேள்வி எழுப்பும் ஹெச்.ராஜா

கடனில் தமிழகம் தத்தளிக்கும் நிலையில், கடலில் 81 கோடியில்  பேனா சிலை தேவையா? - கேள்வி எழுப்பும் ஹெச்.ராஜா
X

DhivakarBy : Dhivakar

  |  26 July 2022 4:52 PM IST

சென்னை: முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நினைவாக அவரது பேனாவிற்கு சிலை அமைப்பது குறித்து, பா.ஜ.க மூத்த தலைவர் ஹெச் ராஜா கடுமையாக விமர்சித்துள்ளார்.


முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நினைவாக, அவரது பேனாவிற்கு தமிழக அரசு கஜானாவிலிருந்து ரூபாய் 81 கோடி ரூபாய் செலவு செய்து, மெரினா கடலில் தமிழக அரசு சிலை அமைக்கப் போவதாக வெளிவந்த செய்திகள், சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


"குஜராத்தில் சர்தார் வல்லபாய் படேலுக்கு சிலை நிறுவிய போது, இதே தி.மு.க ஆதரவாளர்கள் படேல் சிலை திறப்புக்கு பலத்த விமர்சனங்களை பதிவு செய்தனர். ஆனால் இப்பொழுது தி.மு.க தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்பேற்று, கருணாநிதியின் பேனாவிற்கு மக்கள் வரிப்பணத்திலிருந்து ரூபாய் 81 கோடி ரூபாய் செலவில், சிலை அமைப்பது வேடிக்கையாகவுள்ளது" என்று சமூக வலைதளவாசிகள் தி.மு.க'வை கேலி செய்து வருகின்றனர்.


இந்நிலையில் பா.ஜ.க மூத்த தலைவர், ஹெச். ராஜா இது குறித்து சமூக வலைதளத்தில் "நீட் தேர்வை ரத்து செய்வோம் என்ற ரகசியத்தை மறந்துவிட்டது தி.மு.க. பால் விலையை குறைத்து விட்டு, பால் பொருட்களின் விலைகளை ஏற்றி விட்டது விடியல் அரசு. ஒரு பக்கம் சொத்து வரி உயர்வு கழுத்தை நெரித்துக் கொண்டிருக்கிறது. ஷாக் அடிக்க தயாராகும் மின்கட்டண உயர்வு. இப்படி தமிழகம் கடனில் தத்தளித்துக் கொண்டிருக்கும் வேளையில், 81 கோடி ரூபாய் செலவில் கருணாநிதியின் பேனாவிற்கு கடலில் சிலை தேவையா?" என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.

Thamarai Tv

Next Story
கதிர் தொகுப்பு
Trending News