நீலகிரியில் 85 அரசுப் பள்ளிகளை மூட முயற்சியா? எல்.முருகன் கண்டனம்!

நீலகிரி மாவட் டத்தில் 85 அரசுப் பள்ளிகளை மூட முயற்சி செய்வது கண்டிக் கத்தக்கது என்று மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கண்டனம் தெரிவித்தார். இதுகுறித்து அவர் வெள்ளிக் கிழமை விடுத்த அறிக்கையில் கூறும் போது, நீலகிரி மாவட்டத்தில் 15 மாணவர்களுக்கும் குறைவாக இருக்கும் பள்ளிகளின் விவரங் கனை மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் சேகரித்ததாகவும், அதன்படி 88-க்கும் மேற்பட்ட அரசு தொடக்கப் பள்ளிகளை மார்ச் மாதத்துக்குள் மூடும் நட வடிக்கைகளை திமுக அரசு மேற் கொண்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
குன்னூர் வட்டாரத்தில் 19 அரசு தொடக்கப் பள்ளிகள், கூடலூர் வட்டாரத்தில் 18 தொடக்கப் பள்ளிகள், கோந்தகிரி வட்டாரத்தில் 11 தொடக்கப் பள்ளிகள், உதகை வட்டாரத்தில் 37 தொடக்கப் பள்ளி கள் என மொத்தம் 85 அரசு தொடக்கப் பன் ளிகளை மூடுவதற்கான பட்டியலை திமுக அரசு தயார் செய்தது.
15 மாணவர்களுக்கும் குறை இருக்கும் பள்ளிகளை மூடும் விதமாக அந்த மாண வர்களுக்கு மாற்றுச் சான்றிதழ் கொடுத்து அருகில் உன்ன பள்ளி களில் சேர்க்க நடவடிக்கை எடுக் கும்படி கல்வித் துறை ஆய்வு கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டதாகத் தெரிகிறது என கூறினார்.