Kathir News
Begin typing your search above and press return to search.

'ஆத்மநிர்பர் பாரத்' திட்டத்தின் கீழ் 887 கோடியில் சென்னையில் உருவாகவிருக்கும் இரண்டு போர் படை கப்பல்கள்

ஆத்மநிர்பர் பாரத் திட்டத்தின் கீழ் 887 கோடியில் சென்னையில் உருவாகவிருக்கும் இரண்டு போர் படை கப்பல்கள்
X

Mohan RajBy : Mohan Raj

  |  26 March 2022 7:30 PM IST

பாதுகாப்புத்துறை அமைச்சகம் எல்&டி நிறுவனத்துடன் இந்திய கடற்படைக்கு இரண்டு பல்நோக்கு கப்பல்களை இநுதியாவிலேயே அதுவும் சென்னையிலேயே தயாரித்து வாங்க 887 கோடி ரூபாய் மதிப்புள்ள ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.


கடற்படை துணைத்தலைவர் வைஸ் அட்மிரல் எஸ்.என்.கோர்மட் மற்றும் கூடுதல் செயலாளரும், இயக்குனர் ஜெனரலுமான பங்கஜ் அகர்வால் முன்னிலையில் கையெழுத்திட்ட ஒப்பந்தத்தில் இந்தியக் கடற்படையின் பல்வேறு தேவைகளை பூர்த்தி செய்ய செலவு குறைந்த தீர்வை வழங்குவதற்கு முதல் தளமாக எம்.பி.வி இருக்கும் என அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த சேவைகள் விநியோகம் மே 2025 முதல் தொடங்கும் என பாதுகாப்புத்துறை அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.


இந்த கப்பல்கள் சென்னையில் உள்ள காட்டுப்பள்ளியில் எல்&டி கப்பல் கட்டும் தளத்தில் கட்டப்படும் எனவும், கடல்சார் கண்காணிப்பு மற்றும் ரோந்து, டார்பிடோக்களை ஏவுதல் அல்லது மீட்பது மற்றும் பல்வேறு வகையான வான்வெளி மேற்பரப்பு நீருக்கடியில் துப்பாக்கிகள் அல்லது இலக்குகளை இயக்குதல் போன்ற பல செயல்பாடுகளை செய்யும் எனவும் அமைச்சகம் கூறியுள்ளது.


மேலும் இந்த கப்பல்கள் பாதிக்கப்பட்ட கப்பல்களை இழுத்துச் செல்லும் திறன் கொண்டவையாகவும், பேரிடர் நிவாரண உதவி தேவைப்படும் நேரத்தில் அதற்கான உதவிகளை வழங்கும் அம்சங்களைக் கொண்டதாகும் எஸ்.பி மற்றும் மீட்பு நடவடிக்கைகளுக்கான ஆதரவாகவும் தீவு பகுதிகளுக்கு தளவாடங்களை எடுத்துச் செல்லவும் பயன்படும் எனவும் தெரிவித்துள்ளது.


மத்திய அரசின் "ஆத்மநிர்பர் பாரத்" திட்டத்தின் அடிப்படையில் அதன் முயற்சிகளுக்கிணங்க இந்த ஒப்பந்தம் இந்திய கப்பல் கட்டும் துறையில் செயலில் பங்கேற்கும் எனவும் பாதுகாப்பு துறை அமைச்சகம் கூறியுள்ளது.



Source - Swarajya

Next Story
கதிர் தொகுப்பு
Trending News