Kathir News
Begin typing your search above and press return to search.

பிரச்சாரம் ஓயும் நிலையில் தி.மு.கவினருக்கு அடுத்த இடி - ட்ரெண்டாகும் #DMKLosingTN என்ற ஹேஷ்டேக்!

பிரச்சாரம் ஓயும் நிலையில் தி.மு.கவினருக்கு அடுத்த இடி - ட்ரெண்டாகும்  #DMKLosingTN என்ற ஹேஷ்டேக்!

Mohan RajBy : Mohan Raj

  |  4 April 2021 12:15 PM GMT

தேர்தல் பிரச்சாரத்தின் கடைசி நாளான இன்று தமிழகத்தில் அனைத்து கட்சிகளும் தங்களின் முழு வலுவையும் பிரயோகித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில் இன்று காலை வெளிவந்த தமிழகத்தின் முக்கிய நாளேடுகளில் தி.மு.க கடந்த காலத்தில் செய்த தவறுகள், அராஜகங்கள், ஊழல்கள், கொடுமைகள், ரவுடியிசம் என அனைத்துமே செய்தி தொகுப்புகளாய் அச்சடித்து வெளிவர தி.மு.க தரப்பினர் அதிர்ந்து போனார்கள்.

இதனை இன்றைய பிரச்சாரத்தில் தி.மு.க தலைவர் ஸ்டாலின் அவர்களே ஏற்கனவே எழுதி வைத்த பிரச்சார உரையை கூட மறந்து இன்றைய நாளேடுகளில் வெளிவந்த செய்திகளை பற்றி குறிப்பிட்டு பிரச்சாரம் செய்யும் அளவிற்கு இன்றைய செய்தித்தாள்களில் இடம் பெற்ற தி.மு.க செய்திகள் பேசுபொருளாக மாறின மேலும் இந்த தேர்தலின் வாக்கு சதவீதத்தில் இன்றைய செய்திதாள்களின் பங்கு முக்கியமானதாக இருக்கும் என கருதப்படுகிறது.

இந்த நிலையில் தி.மு.க'வினருக்கு அடுத்த இடியாக ட்விட்டர் வலைதளத்தில் #DMKLosingTN என்ற ஹேஷ்டேக் 30000 ட்விட்களை கடந்து இந்திய அளவில் ட்ரெண்டாகி வருகிறது.

பிரச்சார நேரம் முடிய இன்னும் ஒரு மணி நேரமே மீதமிருக்கும் நிலையில் #DMKLosingTN என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டாகி வருவதையடுத்து தி.மு.க'வினர் செய்வதறியாது திகைத்து வருகின்றனர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News