'புதுச்சேரி போலவே தமிழகத்திலும் பா.ஜ.க அலை வரும்' : Dr. L.முருகன்!
By : Mohan Raj
"தமிழ் மண்ணான புதுச்சேரியில் தற்போது தாமரை மலர்ந்துள்ளது. புதுச்சேரியில் வந்துள்ள பா.ஜ.க'வின் அலை தமிழகத்திலும் வரும்" என தமிழக பா.ஜ.க தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி சட்டசப்பேரவை வரலாற்றில் பாஜகவை சேர்ந்த ஒருவர் சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டு இருப்பது இதுவே முதல் முறையாகும். இந்த நிகழ்ச்சியில் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் கூறியதாவது, "தமிழ் மண்ணில் பா.ஜ.க'வைச் சேர்ந்தவர் பேரவைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதற்கு தமிழக பா.ஜ.க சார்பில் வாழ்த்துகளைத தெரிவிக்கிறேன். பா.ஜ.க தமிழகத்தில் வரவே முடியாது, தாமரை மலராது என்று சொன்னார்கள். தற்போது தமிழகத்தில் 4 சட்டப்பேரவை உறுப்பினர்கள் வந்துள்ளனர்.
தமிழகத்தில் மிகப்பெரிய வளர்ச்சியை பா.ஜ.க பெற்று வருகிறது. தமிழ் மண்ணான புதுச்சேரியில் தற்போது தாமரை மலர்ந்துள்ளது. புதுச்சேரியில் வந்துள்ள பா.ஜ.க'வின் அலை தமிழகத்திலும் வரும்" இவ்வாறு அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.