Kathir News
Begin typing your search above and press return to search.

வினையை தேடி இழுத்து வைத்துக்கொண்ட திமுக.... ED விவகாரத்தில் வெடிக்கப்போகும் பூகம்பம்...

வினையை தேடி இழுத்து வைத்துக்கொண்ட திமுக.... ED விவகாரத்தில் வெடிக்கப்போகும் பூகம்பம்...

Mohan RajBy : Mohan Raj

  |  3 Dec 2023 6:43 AM GMT

தேவையில்லாமல் வம்பை விலை கொடுத்து வாங்கி விட்டார்கள்... அமலாக்கத்துறை அதிகாரி விவகாரத்தில் நடந்த திடீர் திருப்பம்....

மதுரை துணை மண்டல அமலாக்கத்துறை அலுவலகத்தில் அலுவலராக பணிபுரிந்துவரும் அங்கித் திவாரி திண்டுக்கல்லை சேர்ந்த அரசு டாக்டர் சுரேஷ்பாபுவிடம் வருமானவரித்துறை பதிவு செய்த வழக்கை சுட்டிக்காட்டி அவ்வழக்கில் அமலாக்கத்துறை விசாரணை நடத்த பிரதமர் அலுவலகத்தில் இருந்து உத்தரவு வந்துள்ளதாக கூறி அதிலிருந்து விடுவிக்க 3 கோடி ரூபாய் வேண்டும் என்று கேட்டு பேரம் பேசியதாகவும், அதனால் முதல் தவணையாக 20 லட்ச ரூபாய் பணத்தை லஞ்சமாக வாங்கியதாக தற்பொழுது புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக டாக்டர் சுரேஷ்பாபு கடந்த 30 ஆம் தேதி அன்று திண்டுக்கல் மாவட்ட ஊழல் மற்றும் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவில் புகார் அளித்ததன் காரணமாக தனது அதிகாரத்தை பயன்படுத்திய அரசு ஊழியரை மிரட்டி பணம் வசூலித்துள்ளார் எனக் கூறி அனுப்பி லஞ்ச ஒழிப்பு போலீஸ் அங்கித் திவாரியை கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.

அதேபோல் அங்கே திவாரி மேலும் யாரிடமாவது பணம் வாங்கி உள்ளாரா என்கின்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர், இது மட்டுமல்லாமல் தபால் தந்தி நகர் பகுதியில் உள்ள அமலாக்கத்துறை மண்டல அலுவலகத்தில் நேற்று மாலை 6 மணிக்கு சோதனை தொடங்கியது பின்னர் விடிய விடிய சோதனை நடத்தப்பட்டு இன்று காலை 7 மணிக்கு சோதனை முடிவடைந்தது.

இது மட்டுமல்லாமல் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை நடத்த முதலில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அனுமதியளிக்காததும் பின்னர் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனைக்கு அனுமதி அளித்ததாகவும் கூறப்படுகிறது. இது மட்டுமல்லாமல் நேற்று நள்ளிரவு ஒரு மணிக்கு கோயம்புத்தூரில் இருந்து சிஆர்பிஎஃப் வீரர்கள் 10 பேர் அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு வருகை தந்து பாதுகாப்பு தர முயன்றனர், ஆனால் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த தல்லாகுளம் காவல் நிலைய ஆய்வாளர் ஏற்கனவே இந்தோ திபெத் படையினர் பாதுகாப்பு பணியில் உள்ளனர்.

அதனால் சி.ஆர்.பி.எப் வீரர்களை அனுமதிக்க முடியாது எனக்கூறி தடுத்துள்ளதாகவும் அங்கிருந்து வரும் தகவல் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் இந்த விவகாரம் தற்பொழுது பரபரப்பாக பேசப்பட்டு வரும் சூழலில் திமுக அரசு இதனை அரசியல் ஆக்க முயல்கிறது இதை அரசியல் ஆக்க கூடாது எனவும் வேறு பல்வேறு கருத்துக்கள் எழுந்துள்ளன.

இந்த நிலையில் இதுகுறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறும் பொழுது 'இது மனித தவறு அமலாக்கத்துறையில் இருக்கக்கூடிய அதிகாரி ஒருவர் செய்த தவறுக்கு ஒட்டுமொத்த துறையையும் அரசியல் ரீதியாக களங்கம் ஆகிவிட்டது எனக் கூறுவது தவறான செயலாகும், இதுபோன்ற குழந்தைத்தனமான அரசியல் கருத்துக்களை கூறுவது தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய அரசியல்வாதிகள்தான்' என கூறியுள்ளார்.

இந்த நிலையில் மூத்த அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர் இது குறித்து கூறும் பொழுது 'இவர்கள் அமலாக்கத்துறை அதிகாரி மீது நடவடிக்கை எடுத்தது சரிதான்! நான் அதை தவறு என்று சொல்லவில்லை, ஏஜென்சியில் இருக்கக்கூடிய ஒருவர் மத்திய அரசு அலுவலராக இருந்தாலும் சரி, அவர் மாநில அரசு அலுவலராக இருந்தாலும் சரி தனது அதிகாரத்தை பயன்படுத்தி இப்படி சட்டத்திற்கு புறம்பான காரியங்களில் ஈடுபடுவது தண்டிக்கப்பட வேண்டிய ஒன்றுதான். ஆனால் இவர்கள் தேவை இல்லாமல் திமுகவினர் இதனை பெரிதுபடுத்தி வம்பை விலை கொடுத்து வாங்குகின்றனர், அமலாக்கத்துறை என்பது ஒரு அமைப்பு அந்த அமைப்பை சார்ந்த அதிகாரி தவறு செய்தால் அந்த அதிகாரி மீது எடுக்கக்கூடிய நடவடிக்கைகளுக்கு சிபிஐ உதவிய நாட வேண்டும்! அதுதான் முறையும் கூட, ஆனால் இவர்கள் எடுத்தோம் கவிழ்த்தோம் என உடனே எல்லாவற்றையும் செய்யும் காரணத்தினால் இது வரும் காலங்களில் மிகப்பெரிய அளவில் பிரச்சினையாக உருவாகலாம். அதுவும் மனல் விவகாரம் தற்போது விஸ்வரூபம் எடுத்திருக்கும் வேளையில் இவர்கள் இதுபோன்று அமலாக்கத்துறை அதிகாரி மீது காழ்ப்புணர்ச்சியின் காரணமாக நடவடிக்கை எடுப்பதுபோன்று அமலாக்கத்துறையை சீண்டி தேவையில்லாமல் திமுகவிற்கே வினையை தேடிக்கொள்கிறார்கள்' என கூறியுள்ளார்.

இது மட்டுமல்லாமல் ஏற்கனவே மணல் விவகாரத்தில் நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை நான்காயிரம் கோடி ரூபாய் அளவிற்கு மணல் விவகாரத்தில் முறைகேடு நடந்தது எனக் கூறியதும் அந்த வழக்கு அமலாக்கத்துறை வசம் தற்பொழுது நடவடிக்கையில் இருந்து வருவதும் குறிப்பிடத்தக்கது...

Next Story
கதிர் தொகுப்பு
Trending News