Kathir News
Begin typing your search above and press return to search.

"லாட்டரி மீண்டும் வந்தால்? மக்கள் எதிர்ப்பை விடியல் அரசு சந்திக்கும்!" - எச்சரிக்கும் EPS!

லாட்டரி மீண்டும் வந்தால்? மக்கள் எதிர்ப்பை விடியல் அரசு சந்திக்கும்! - எச்சரிக்கும் EPS!

ParthasarathyBy : Parthasarathy

  |  25 July 2021 1:16 AM GMT

தமிழகத்தில் கருணாநிதி ஆட்சி காலத்தில் தான் லாட்டரி சீட்டு கலாச்சாரம் தமிழக மக்களிடம் புகுத்தப்பட்டது. உழைக்காமல் சீக்கிரம் பணக்காரன் ஆகி விடலாம் என்ற ஆசையை மக்களிடையே தூண்டிவிட்டு, பல ஏழை மக்களை நடு தெருவில் நிறுத்தியது இந்த லாட்டரி கலாச்சாரம். இவ்வாறு இருந்த நிலையில் ஜெயலலிதா அவர்களின் ஆட்சியில் 2003-ஆம் ஆண்டு லாட்டரிகள் ஒரே நாளில் முற்றிலுமாக ஒழிக்கப்பட்ட்டது. ஆனால், தற்போது தி.மு.க அரசு மீண்டும் லாட்டரி கலாச்சாரத்தை தமிழக மக்களிடம் திணிக்க திட்டமிடுவதாக தகவல் வெளியாகி உள்ளது.


இந்த நிலையில், தமிழக எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி லாட்டரி தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில் "கருணாநிதி ஆட்சி காலத்தில் தான், வெளி மாநில லாட்டரிகள் தமிழகத்தில் அனுமதிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து குதிரை ரேஸ், சீட்டாட்டம் போல் லாட்டரி சீட்டு தமிழகத்தில் மாபெரும் சூதாட்டமாக மாறியது. தனியார் லாட்டரி ஏஜென்டகள், வெளி மாநில லாட்டரி சீட்டுகளை கள்ள நோட்டு அச்சடிப்பது போல் அச்சிட்டு மக்களிடம் விற்றார்கள்.


உடனடியாக பணக்காரன் ஆகி விடலாம் என்ற ஆசையை நம்பி ஏழை, எளிய மக்கள் லாட்டரி மயக்கத்தில் தங்கள் குடும்பத்தையும் வாழ்க்கையையும் இழந்தார்கள். தனியார் லாட்டரிகளால் பணம் இழந்த பல அப்பாவிகள் தற்கொலை செய்த அவலமும் நிலவியது. கடந்த 2003 ஜனவரி மாதம், அரசு கொள்கை முடிவு எடுத்து, ஒரே கையெழுத்தில் ஒரே இரவில் லாட்டரி சீட்டை தமிழகத்தில் ஒழித்த பெருமை அம்மா ஜெயலலிதாவை சாரும்.


இந்த நிலையில், மக்களின் தலையில் மண்ணை வாரிக்கொட்ட, சந்தர்ப்பவசத்தால், தற்போது பதவியில் உள்ள தி.மு.க-வின் விடியா அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வருகிறது. ஆட்சிக்கு வருவதற்கு முன், அரசுக்கு வருவாயை பெருக்கும் வழி எங்களுக்கு தெரியும் என்று கொக்கரித்த இவர்கள், லாட்டரி சீட்டை மீண்டும் கொண்டு வந்து தமிழகத்தை சுடுகாடாக்க முடிவு செய்துள்ளது மிகவும் கண்டிக்கத்தக்கது.

தனியார் லாட்டரி ஏஜென்ட்கள் கொள்ளை அடிக்கவும், அதன் மூலம் ஆட்சியாளர்கள் பெருத்த ஆதாயம் பெறுவதற்கான இந்த அதிகாரப்பூர்வ லாட்டரி திட்டத்தை தி.மு.க அரசு கைவிட வேண்டும். அரசின் வருவாயை பெருக்க பல நல்ல வழிகளை தேட வேண்டும். லாட்டரி திட்டத்தை மீண்டும் கொண்டு வந்தால், தமிழக மக்களின் எதிர்ப்பை ஸ்டாலின் அரசு சந்திக்க நேரிடும். லாட்டரி சீட்டை மீண்டும் கொண்டு வர வேண்டாம் என அ.தி.மு.க சார்பில் எச்சரிக்கிறேன்." என்று அவர் கூறியுள்ளார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News