Kathir News
Begin typing your search above and press return to search.

திமுகவை INDI கூட்டணியில் இருந்து விரட்ட போடப்பட்ட பிள்ளையார் சுழி...! உறுதியான மேலிடத்து தகவல்...!

திமுகவை INDI கூட்டணியில் இருந்து விரட்ட போடப்பட்ட பிள்ளையார் சுழி...! உறுதியான மேலிடத்து தகவல்...!
X

Mohan RajBy : Mohan Raj

  |  25 Sep 2023 2:56 PM GMT

ஆரம்பித்துவிட்டது திமுக காங்கிரஸ் யுத்தம்...! சூத்திரதாரியான உதயநிதி...!

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் நடத்திய சனாதன எதிர்ப்பு மாநாட்டில் கலந்து கொண்ட உதயநிதிக்கு அவர் பேசிய 'சனாதனத்தை ஒழிப்பேன்' என்ற வார்த்தை தற்பொழுது திமுகவை தேசிய அளவில் இருந்து அதன் கூட்டணி கட்சிகளே ஒதுக்கி வைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

சனாதன எதிர்ப்பு மாநாட்டில் கலந்து கொண்டு 'சனாதனத்தை எதிர்க்க கூடாது ஒழிக்க வேண்டும்' என உதயநிதி பேசியது அரசியல் விமர்சகர்களால் இது திமுகவிற்கு நிச்சயம் எதிர் வினையை தான் தரும் இதுபோன்று இதுவரை திமுக தலைவர்கள் குறிப்பாக அவரது தாத்தா கருணாநிதி கூட பேசியது கிடையாது என வேறு பல்வேறு விமர்சனங்களை முன் வைத்தனர்.

இது மட்டுமல்லாமல் கடந்த வாரத்தில் நடைபெற்ற திமுக முப்பெரும் விழா கூட்டத்தில் கூட 'உதயநிதி விபரீதம் புரியாமல் சிறுபிள்ளைத்தனமாக பேசி விடுகிறார்' என திமுகவின் பொருளாளரும், நாடாளுமன்ற நிலைக்குழு தலைவருமான டி ஆர் பாலு வேறு கூறியது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் INDI கூட்டணியில் இருந்து குறிப்பாக வட மாநிலத்தில் இருக்கும் கட்சிகள் எல்லாம் ஆம் ஆத்மீ, காங்கிரஸ், சிவசேனா, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட முக்கிய கட்சிகள் உதயநிதியின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்ததோடு மட்டுமல்லாமல் இந்த விவகாரத்தை வைத்துக்கொண்டு நம் மாநிலத்தில் அரசியல் செய்ய முடியாது என்பது போன்று யோசிக்க ஆரம்பித்ததாக வேறு தகவல்கள் கிடைத்தன.

இந்த நிலையில் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஏன் இது குறித்து பேசாமல் இருக்கிறார்கள் பேச வேண்டும் என்ற சர்ச்சை கருத்துக்கள் முன்வைக்கப்பட்ட பொழுது தற்பொழுது பிரியங்கா காந்தி தரப்பிலிருந்து முதல் குரல் ஒன்று எழுந்துள்ளது.

ஆம் உதயநிதி ஸ்டாலினை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என பிரியங்கா காந்தியின் அரசியல் ஆலோசகர் வெறும் காங்கிரஸ் கட்சியின் தலைவர்களில் ஒருவருமான ஆச்சார்ய பிரமோத் கிருஷ்ணம் கூறியுள்ளது திமுகவை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

ஆச்சார்ய பிரமோத் கிருஷ்ணம் கடந்த சில நாட்களாக ஹரித்துவாரில் முகாமிட்டு பல்வேறு ஆன்மீக ஒரு பெரியோர்களை சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார். ஹரித்வார் சேதம் ஜோதி ஆசிரமத்திற்கு சென்ற ஆச்சார்ய பிரமோத் கிருஷ்ணம் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர்களிடம் கூறும் பொழுது, 'ராவணன் பரம்பரையிலிருந்து வந்தவர்கள் தான் சனாதன தர்மத்தை எதிர்ப்பவர்கள். சனாதன தர்மத்தை எதிர்க்கும் கட்சிகளை இந்தியா கூட்டணியில் இருந்து தூக்கி எறிய வேண்டும்! சனாதன தர்மத்தின் பக்கம் நிற்கப் போகிறீர்களா அல்லது சனாதன தர்மத்திற்கு எதிராக நிற்க போகிறீர்களா என்பதை முடிவு செய்யும் தருணம் இது என்றார்.

மேலும் உத்திரபிரதேசத்தில் சமாஜவாடி கட்சித் தலைவர்கள் சனாதன தர்மத்தின் பக்கம் கடவுள் ராமனின் பக்கம் நிற்க வேண்டும் இல்லையெனில் 2024 லோக்சபா தேர்தல் உத்திரபிரதேசத்தில் இந்தியா கூட்டணி பெறும் தோல்விய தழுவும் வேறு என வேறு ஆச்சார்ய பிரமோத் கிருஷ்ணம் எச்சரிக்கை செய்தார். மேலும் அவர் கூறும் பொழுது சனாதனத்தை இழிவு படுத்துவது என்பது மதச்சார்பின்மை அல்ல இந்த நாட்டு மக்களை அவமதிப்பதாகும், காயப்படுத்துவது தான் சனாதனத்துக்கு எதிரான குரல். சனாதன தர்மத்தை எதிர்ப்பது ஒரு பேஷன் ஆகிவிட்டது இப்பொழுது திமுகவினர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர் இவர்கள் அத்தனை பேரும் அரசியல் சாசனத்தின் பெயரால் உறுதிமொழி எடுத்துக் கொண்டவர்கள்.

இப்படி சனாதனத்தை இழிவு படுத்துகிறார்களை அமைச்சர் பதவியில் இருந்து டிஸ்மிஸ் செய்ய வேண்டுமென ஆச்சார்ய பிரமோத் கிருஷ்ணம் கூறியுள்ளார். இப்படி பிரியங்கா காந்தியின் அரசியல் ஆலோசகரும் காங்கிரஸ் முக்கிய தலைவருமான ஆச்சார்ய பிரமோத் கிருஷ்ணம் கூறியுள்ளது திமுக தரப்பை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது, மேலும் காங்கிரஸ் சார்பில் இருந்து உதயநிதிக்கு எதிர்வினை வரும் திமுக கூட்டணியை I.N.D.I கூட்டணியில் இருந்து விரட்டும் வரை இந்த சனாதன விவகாரம் ஓயாது எனவும் வேறு அரசியல் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News