பெருவிளை சானல்கரை ரோடில் சாலை வசதி குறித்து நேரில் ஆய்வு : களத்தில் பா.ஜ.க எம்.எல்.ஏ MR காந்தி!
By : Parthasarathy
நாகர்கோயில் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் பா.ஜ.க வை சேந்த எம்.ஆர். காந்தி. இவர் தொடர்ந்து அந்த தொகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று, அதை நேரில் பார்வையிட்டு நிறைவேற்றுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிடுகிறார். இவ்வாறு இருக்கையில் இன்று பெருவிளை சானல்கரை ரோடில் சாலை வசதி குறித்து மக்கள் கோரிக்கை வைத்ததை அடுத்து எம்.ஆர். காந்தி அதை நேரில் சென்று பார்வையிட்டார்.
இது குறித்து அவர் கூறும்போது "பெருவிளை சானல்கரை ரோட்டில் சாலை வசதி மற்றும் தடுப்புச்சுவர் வேண்டியும் மக்கள் என்னிடம் கோரிக்கை விடுத்தனர்.மக்களின் கோரிக்கையின் அடிப்படையில் இன்று அந்த பெருவிளை சானல்கரை ரோடில் உள்ள மோசமான சாலைகள் மற்றும் அங்கு தடுப்புச்சுவர் இல்லாமல் இருக்கும் பள்ளத்தை நேரில் சென்று பார்வையிட்டேன்.அதன் பிறகு, அதிகாரிகளிடம் கூறி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தேன்." என்று அவர் கூறினார். இதனை தொடர்ந்து பா.ஜ.க நாகர்கோவில் கிழக்குமாநகர இளைஞரணி பொருளாளர் சதீஷ்குமார் அவர்கள் இல்லத்திருமணவிழாவில் எம்.ஆர். காந்தி கலந்து கொண்டு மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.