எச்சரித்த ஸ்டாலின், பெட்டிப்பாம்பாய் அடங்கிய PTR - நடந்தது என்ன?

முதல்வர் ஸ்டாலின் நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் மீது கடும் கோபத்தில் உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
தி.மு.க ஆட்சியமைத்து இன்னும் ஒரு மாதம் கூட முடிவடையாத நிலையில் தமிழக நிதி அமைச்சராக பொறுப்பேற்றிருக்கும் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களில் அளவுக்கு அதிகமாக திமிராக பேசுவதும், பத்திரிக்கையாளர் சந்திப்பில் ஆணவமாக நடந்து கொள்வதும், பிற கட்சி எம்.எல்.ஏ-க்களிடம் குறிப்பாக பா.ஜ.க-வை சேர்ந்தவர்களிடம் ஜம்பமாக பேசி வீண் சண்டையிடுவதும் முழு நேரப்பணியாக செய்து வந்தார்.
இது ஒருபுறம் இருக்க ஜி.எஸ்.டி கூட்டத்தில் ஆதாரமற்ற குறைகள் சொல்லி தி.மு.க-வின் நீண்ட கால அரசியல் பெயருக்கு களங்கம் வரும் வகையில் நடந்து கொண்டார். இதனை உணர்ந்த தி.மு.க சீனியர்கள் இது ஆட்சி பீடத்தில் இருக்கும் நமக்கு நல்லதல்ல என முதல்வர் ஸ்டாலினிடம் கூற கடும் கோபமடைந்தாராம் ஸ்டாலின்.
கடும் போராட்டங்களுக்கு பின் ஆட்சியை பிடித்துள்ளோம் என்ற எரிச்சலுடன் பழனிவேல் தியாகராஜனை அழைத்துக் கண்டித்த ஸ்டாலின், "பட்ஜெட் கூட்டத்தொடரில் உங்கள் திறமையைக் காண்பியுங்கள். ட்விட்டரிலும், மீடியாக்கள் முன்பாகவும் ஜம்பம் காட்ட வேண்டாம்" என்று கண்டிப்புடன் கூறியிருக்கிறார்" என தகவல்கள் தெரிவிக்கின்றன.
Source - ஜூனியர் விகடன்