இந்தியாவில் தியாகத்திற்கான பாரம்பரியம் உள்ளது: RSS தலைவர் மோகன் பகவத்!

By : Bharathi Latha
உலகின் நலனுக்காக இந்தியா சக்திவாய்ந்த நாடாக இருக்க வேண்டும் என்று RSS தலைவர் மோகன் பகவத் கூறினார். ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள ரவிநாத் ஆசிரமத்தில் நடந்த நிகழ்ச்சியில் RSS தலைவர் மோகன் பகவத் பேசும் போது, இந்தியா யாரையும் வெறுத்தது கிடையாது. ஆனால், அதிகாரம் இருக்கும் போது தான் அன்பு மற்றும் நலன் குறித்த புரிதலை உலகம் கவனிக்கும். இதுதான் உலக நியதி என்றும், இந்த நியதியை மாற்ற முடியாது. எனவே உலகின் நலனுக்காக, நாம் சக்திவாய்ந்தவர்களாக இருக்க வேண்டும்.
நமது பலத்தை உலகம் பார்க்க வேண்டும். உலக நலனே நமது மதம். இது தான் ஹிந்து மதத்தின் உறுதியான கடமை. பெரிய அண்ணனாக இந்தியா, உலகின் அமைதி மற்றும் நலனுக்காக பணியாற்ற வேண்டும். இலங்கை, நேபாளம் மற்றும் மாலத்தீவில் பிரச்னை ஏற்பட்ட போது, இந்தியா தான் முதலில் அவர்களுக்கு உதவியது. இந்தியாவில் தியாகத்திற்கான பாரம்பரியம் உள்ளது என்று அவர் கூறினார்.
