புதுச்சேரி ஆளுநரிடம் பாடம் கற்றுக் கொள்ளுங்கள் - தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு பா.ஜ.க தலைவர் SG சூர்யா அட்வைஸ்!
By : Kathir Webdesk
கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள தி.மு.க அரசு திணறி வருகிறது. பல்வேறு விஷயங்களில் முடிவு எடுக்க முடியாமல் மக்களை மேலும் கஷ்டப்படுத்தி வருவதாக புலம்பி தீர்க்கின்றனர் கொரோனா நோயாளிகளின் உறவினர்கள்.
இந்நிலையில், புதுச்சேரியில் ஆம்புலன்ஸ் கட்டணங்களை சீர் படுத்தியது, ரெம்டெசிவிர் மருந்து விநியோகத்தை முறைப்படுத்தியது ஆகியவற்றை சுட்டிக்காட்டி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், புதுச்சேரி ஆளுநர் மாண்புமிகு தமிழிசை அவர்களிடம் பாடம் கற்க வேண்டும் என கருத்து தெரிவித்துள்ளார் தமிழக பா.ஜ.க-வின் இளம் தலைவர் SG சூர்யா.
இது குறித்து அவர் கூறியிருப்பதாவது "புதுச்சேரியில் ஆம்புலன்ஸ் கட்டணம் ₹500 முதல் ₹850 மட்டுமே, தமிழகத்திலோ ₹1500 முதல் ₹4000 வரை. ரெம்டெசிவிர் மருந்தோ தேவைப்படும் அரசு/தனியார் மருத்துவமனைகளுக்கு நேரடியாக அரசாங்கத்தால் வழங்கப்படுகிறது, யாரும் எங்கும் சென்றும் பெற வேண்டாம்; தமிழகத்திலோ ஆயிரக்கணக்கில் மக்களை கூட வைத்து மருந்தும் ஒழுங்காக கிடைப்பதில்லை. தமிழக முதல்வர் புதுச்சேரி ஆளுநரிடம் பாடம் கற்க வேண்டும். செய்வாரா?"
தமிழகத்தில் ரெம்டிசிவிர் விநியோகம் எப்படி செய்வதென்று தெரியாமல் தி.மு.க அரசு நாட்களை கடத்த, நோயாளிகளின் உறவினர், நண்பர்களோ ஆயிரக்கணக்கில் கூடி மருந்தும் கிடைக்காமல், கொரோனா தொற்று அபாயத்திலும் சிக்கி வருகிறார்கள். புதுச்சேரியில் இருந்து பாடம் கற்குமா தமிழக அரசு? மக்களின் துயரை துடைக்குமா? ஏக்கத்தில் மக்கள்...