அழைத்த காவல்துறை - அழுகாமல் சென்ற SG சூர்யா!
By : Mohan Raj
தற்பொழுது பாஜக மாநில செயலாளர் SG சூர்யா அவர்களின் கைது தான் தமிழக அரசியலில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
மதுரை கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த எம் பி சு வெங்கடேசன் அவர்களை நோக்கி SG சூர்யா எழுப்பிய கேள்விதான் நேற்றைய கைதுக்கு காரணமாக அமைந்தது என தகவல்கள் கிடைத்துள்ளன.
விமர்சனத்தை எதிர்கொள்ள முடியாமல் மதுரை எம்பி மீது வைக்கப்பட்ட விமர்சனத்திற்கு பதில் அளிக்க முடியாமல் காவல்துறை SG சூர்யாவை கைது செய்துள்ளது என மாநில முழுவதும் பாஜகவினர் தற்பொழுது ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.
இது மட்டுமல்லாமல் நேற்று இரவு 11 மணி அளவில் பாஜக மாநில செயலாளர் SG சூர்யாவின் தி.நகரில் உள்ள வீட்டிற்கு சென்ற காவல்துறையினர், ' முதலில் வேறு ஒரு நபரின் பெயரை சொல்லி எங்கிருக்கிறார் என கேட்டதாகவும் அது தெரியாது என SG சூர்யா சொன்னதாகவும், பின்னர் உங்கள் பெயர் என்ன என காவல்துறையினர் கேட்டதற்கு என் பெயர் SG.சூர்யா என கூறியதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.
இது மட்டுமல்லாமல் நீங்கள் எங்களுடன் வர வேண்டுமென அழைத்தவுடன் SG.சூர்யா எதற்காக என கேள்வி எழுப்பி உள்ளார், உங்கள் மீது வழக்கு இருக்கிறது நீங்கள் வரவேண்டும் என கேட்டதுடன் SG சூர்யா தனது ஓட்டுநர் மணியிடம் தெரிவித்துவிட்டு உடனே அந்த எஃப்.ஐ.ஆர் காப்பியை வாங்கி ஓட்டுனர் மணியிடம் கொடுத்துவிட்டு 'வீட்டில் சொல்லி விடுப்பா' என்று சொல்லிவிட்டு உடனே காவல்துறையினருடன் காரில் கிளம்பி விட்டார் SG சூர்யா இந்த தகவல்கள் தற்போது பிரத்யோகமாக கிடைத்துள்ளன.
ஏற்கனவே கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழகத்தில் உள்ள அமைச்சர் ஒருவரை கைது செய்ய முற்படும்பொழுது அவர் அழுது அடம் பிடித்து அதிகாரிகளை எட்டி உதைத்ததும் தற்பொழுது SG சூர்யாவை கைது செய்யும் பொழுது அவர் ஒத்துழைப்பு தருகிறேன் எனக்கூறி உடனே சென்றது தற்பொழுது சமூக வலைதளங்களில் பேசும் பொருளாக மாறி வருகிறது.