Kathir News
Begin typing your search above and press return to search.

'நான் இருக்கேன் ப்ரோ' - உடனடியாக SG சூர்யா வீட்டிற்கு சென்று ஆறுதல் கூறிய அண்ணாமலை!

நான் இருக்கேன் ப்ரோ - உடனடியாக SG சூர்யா வீட்டிற்கு சென்று ஆறுதல் கூறிய அண்ணாமலை!
X

Mohan RajBy : Mohan Raj

  |  17 Jun 2023 3:42 PM IST

தமிழக பாஜக மாநில செயலாளர் SG சூர்யா கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் இருக்கும் சமயத்தில் அண்ணாமலை ஓடோடி சென்று அவரது வீட்டிற்கு ஆறுதல் கூறியுள்ளார்.

தமிழக பாஜக மாநில செயலாளர் SG சூர்யா சமூக வலைதள பதிவு ஒன்றிற்காக கைது செய்யப்பட்டார், சமூக வலைதளத்தில் கம்யூனிஸ்ட் கட்சி எம்பி குறித்து அவர் எழுப்பியிருந்த கேள்வியை காரணமாக வைத்து அவர் மீது வழக்கு பதியப்பட்டு கைது செய்யப்பட்டு தற்பொழுது நீதிமன்ற விசாரணையில் இருந்து வருகிறார். சனி, ஞாயிறு ஆகிய இரண்டு தினங்கள் நீதிமன்றம் விடுமுறை என்பதால் தற்பொழுது அவர் காவல்துறை கட்டுப்பாட்டில் உள்ளார்.

இந்த நிலையில் நேற்று நள்ளிரவில் கைது செய்யப்பட்ட SG சூர்யா இன்று மதுரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு நீதிமன்றத்தில் வழக்கை சந்தித்துக் கொண்டிருக்கும் அதே சமயம் உடனடியாக தி.நகரில் உள்ள அவரது வீட்டிற்கு ஓடி சென்று அண்ணாமலை சந்தித்துள்ளார். சூர்யா வீட்டில் அவரது தாத்தா மட்டும் தற்போது வசித்து வருகிறார், இந்த நிலையில் அவரது தாத்தாவிடம் சென்று சந்தித்து விட்டு பேசி ஆறுதல் கூறி, 'நான் இருக்கிறேன் பயப்படாதீர்கள்' என பேசிவிட்டு அண்ணாமலை ஆறுதல் கூறி வந்த புகைப்படங்கள் இணையங்களில் வைரல் ஆகிறது.

'கட்சி உங்களுடன் இருக்கும் கவலைப்படாதீர்கள்' என அண்ணாமலை ஆறுதல் கூறுவது போன்று இந்த சந்திப்பு அமைந்ததாக சமூக வலைதளங்களில் அண்ணாமலை ஆதரவாளர்கள் பலரும் கொண்டாடி வருகின்றனர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News