Kathir News
Begin typing your search above and press return to search.

பா.ஜ.க மாநில செயலாளர் SG சூர்யாவுக்கு மீண்டும் சம்மன்.. பின்னணியில் தி.மு.க.வா? நடந்தது என்ன?

பா.ஜ.க மாநில செயலாளர் SG சூர்யாவுக்கு மீண்டும் சம்மன்.. பின்னணியில் தி.மு.க.வா? நடந்தது என்ன?
X

Bharathi LathaBy : Bharathi Latha

  |  21 July 2024 3:23 PM GMT

கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய உயிரிழப்பு தொடர்பான விசாரணைக்காக விழுப்புரம் சி.பி.சி.ஐ.டி அலுவலகத்தில் பாஜக மாநிலச் செயலாளர் எஸ்.ஜி.சூர்யா அவர்கள் நேற்று ஆஜரானார். விசாரணைக்குப் பிறகு, "உண்மை குற்றவாளிகளை கண்டுபிடிக்க வேண்டிய சி.பி.சி.ஐ.டி போலீசார், திமுகவுக்கும், தமிழக அரசுக்கும் எதிராக கருத்துக்களை தெரிவிக்கும் எதிர்கட்சியினரை அச்சுறுத்தும் வகையில் இதுபோன்ற விசாரணையை நடத்துகின்றனர்" என்று விழுப்புரம் சி.பி.சி.ஐ.டி அலுவலகத்தில் ஆஜரான பாஜக மாநிலச் செயலாளர் எஸ்.ஜி.சூர்யா கூறியுள்ளார்.

சி.பி.சி.ஐ.டி அலுவலகத்தில் விசாரணை:

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 67 பேர் உயிரிழந்தது தொடர்பாக சி.பி.சி.ஐ.டி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்பு சம்பவத்தையும், அது குறித்து விசாரணை நடத்தி வரும் சி.பி.சி.ஐ.டி போலீஸார் குறித்தும் தனது கருத்துகளை சமூக வலைதளங்களில் பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யா பதிவிட்டதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து சமூக வலைதளங்களில் திமுக அரசை கேள்வி கேட்கும் விதமாக தனது கருத்துக்களை வெளியிட்டது தொடர்பாக விழுப்புரத்தில் உள்ள சி.பி.சி.ஐ.டி அலுவலகத்தில் விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு பாஜக மாநிலச் செயலாளர் எஸ்.ஜி.சூர்யாவுக்கு சி.பி.சி.ஐ.டி போலீஸார் சம்மன் அனுப்பி இருந்தனர். இதனைத் தொடர்ந்து விழுப்புரத்தில் உள்ள சி.பி.சி.ஐ.டி அலுவலகத்தில் பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யா சனிக்கிழமை நேற்று நேரில் ஆஜரானார்.


மேலும் எக்ஸ் தளத்தில் எஸ்.ஜி.சூர்யா வெளியிட்ட கருத்து குறித்து அவரிடம் சி.பி.சி.ஐ.டி கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கோமதி தலைமையிலான போலீசார் சுமார் 2 மணி நேரம் வரை விசாரணை நடத்தினர். இதனைத் தொடர்ந்து மீண்டும் அழைக்கும்போது வர வேண்டும் எனக்கூறி அவரை அனுப்பி வைத்தனர். இத்தகவல் அறிந்த பாஜக நிர்வாகிகள் சி.பி.சி.ஐ.டி அலுவலகம் அருகில் குவிந்தனர். விசாரணைக்கு பின்னர் செய்தியாளர்களிடம் எஸ்.ஜி.சூர்யா கூறும் போது, “உண்மைக் குற்றவாளிகளை கண்டுபிடிக்க வேண்டிய சிபிசிஐடி போலீசார், திமுகவுக்கும், தமிழக அரசுக்கும் எதிராக கருத்துகளை தெரிவிக்கும் எதிர்கட்சியினரை அச்சுறுத்தும் வகையில் இது போன்ற விசாரணையை நடத்துகின்றனர்" என்றார். எஸ்.ஜி.சூர்யா அவர்கள் எக்ஸ் வலைதள பதிவிற்காக தமிழக காவல்துறையினரால் சம்மன் அனுப்பப்படுவது இது முதல் முறையல்ல.

இதற்கு முன்னதாக, கம்யூனிஸ்ட் எம்.பி சு.வெங்கடேசனுக்கு எதிராக எக்ஸ் பதிவிற்காக கைது செய்யப்பட்டார். அந்த பதிவில், கம்யூனிஸ்ட் கவுன்சிலரால் தூய்மை பணியாளரின் உயிர் பறிபோனது என்றும், மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கள்ள மௌனம் காக்கிறார் என பதிவிட்டிருந்தார். கடலூரில் சம்பவம் நடந்தபோது, ​​சூர்யா கவனக்குறைவாக அதை மதுரை என்று பகிர்ந்துள்ளார், அதை அவர் பின்னர் கடலூர் என திருத்தம் செய்தார். பிறகு அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் சிதம்பரம் கோவிலின் தீக்ஷிதர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் நிலை குறித்த கம்யூனின் அறிக்கை சம்பந்தப்பட்ட மற்றொரு வழக்கில் எஸ்.ஜி.சூர்யாவுக்கு போலீஸாரால் சம்மன் அனுப்பப்பட்டது. மேலும் தற்போது இந்த சமீபத்திய சம்மன் மூலம், மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு, சமூக வலைதளப் பதிவுகளுக்காக தன் மீது வழக்குப் போட்டு தன்னை துன்புறுத்த முயற்சிப்பதாக சூர்யா குற்றம் சாட்டியுள்ளார்.


தி.மு.க அரசால் என்னை ஒன்றும் செய்ய முடியாது:

உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடிப்பதற்கு பதிலாக, எதிர்க்கட்சிகளை மிரட்டும் வகையில் திமுக மற்றும் தமிழக அரசை விமர்சிப்பவர்களிடம் சி.பி.சி.ஐ.டி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக எஸ்.ஜி.சூர்யா அவர்கள் சமூக வலைத்தள பக்கங்களில் கூறும் பொழுது, "அமெரிக்கப் பயணத்திலிருந்து திரும்பியபோது, ​​சம்மன் அனுப்புவதற்காக தனது வீட்டில் அதிகாரிகள் காத்திருந்தார்கள். என்னைக் குறிவைத்து எவ்வளவு முயன்றாலும் திமுக அரசால் என்னை ஒன்றும் செய்ய முடியாது. எந்தவொரு பொய் வழக்குகளையும், அரசியல் பழிவாங்கலையும் எதிர்கொள்ள எனது அமைப்பு என்னை தயார்படுத்தியுள்ளது" என்று அவர் கூறி உள்ளார்.

Input & Image courtesy:The Commune News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News