செய்யாத வேலையை செய்ததாக கூறும் தி.மு.க எம்.பி: விலாசிய பா.ஜ.க செயலாளர் SG. சூர்யா!

அடையாறு மண்டலம், 177வது வார்டுக்கு உட்பட்ட வேளச்சேரி பகுதியில், 392 தெருக்கள் உள்ளன. இதில், 85 சதவீத தெருக்கள், பருவமழை காலத்தில் வெள்ளம் சூழ்ந்து பாதிக்கப்படும். அதேபோல் இங்கு குடிநீர், கழிவுநீர் குழாய்கள் பதித்து, 40 ஆண்டுக்கு மேலாகிறது. தற்போதைய மக்கள் தொகைக்கு ஏற்ற கொள்ளளவில் குழாய்கள் இல்லை. இதனால், அடிக்கடி குழாயில் விரிசல் ஏற்பட்டு, கழிவுநீர் பிரச்னை அதிகரிக்கிறது.
அடையாறு மண்டலம், 177வது வார்டுக்கு உட்பட்ட வேளச்சேரி பகுதியில் 40 ஆண்டுகளுக்கு முன் பதித்த குடிநீர் மற்றும் கழிவு நீர் குழாய்களில் ஏற்படும் விரிசல் பிரச்சனை காரணமாக பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். உடனடியாக களத்தில் வேளச்சேரி பா.ஜ.க இணைந்து 400க்கும் மேற்பட்ட புகார்களுடன் உரிய அதிகாரிகளிடம் இது பற்றி புகார் தெரிவித்தது. இதன் விளைவாக தற்பொழுது குடிநீரில் கழிவு நீர் கலக்கும் பிரச்சனைக்கு தீர்வு காணப்பட்டது. இதை தான் செய்ததாக தம்பட்டம் அடித்த தி.மு.க எம்.பி தமிழச்சி தங்கபாண்டியனுக்கு தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் உண்மையை உடைத்து விலாசி இருக்கிறார் தமிழக பா.ஜ.கவின் செயலாளர் SG. சூர்யா.