Kathir News
Begin typing your search above and press return to search.

"நேரடி விவாதத்திற்கு தயாரா?" காங்கிரஸ் விஜய் வசந்திற்கு, பா.ஜ.க S.G சூர்யா சவால்!

நேரடி விவாதத்திற்கு தயாரா? காங்கிரஸ் விஜய் வசந்திற்கு, பா.ஜ.க S.G சூர்யா சவால்!
X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  4 April 2021 4:24 AM GMT

கன்னியாகுமாரி எம்.பி-யாக இருந்த காங்கிரஸ் கட்சியை சேர்ந்த திரு வசந்தகுமார் மறைந்ததை அடுத்து அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் நடக்கவிருக்கிறது. காங்கிரஸ் கட்சியின் சார்பில், வசந்தகுமாரின் மகன் விஜய் வசந்த் போட்டி இடுகிறார். இவருக்கு எதிராக முன்னாள் மத்திய அமைச்சர் திரு பொன். ராதாகிருஷ்ணன் பா.ஜ.க சார்பில் போட்டி இடுகிறார். இந்த நிலையில் தேர்தல் பிரச்சாரத்தின் போது, காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் மத்திய மோடி அரசு கொண்டு வந்த ஜி.எஸ்.டி திட்டத்தை விமர்சனம் செய்து பேசியுள்ளார். ஆனால் மறைந்த கன்னியாகுமாரி முன்னாள் காங்கிரஸ் எம்.பி வசந்தகுமார் ஜி.எஸ்.டி திட்டத்தை முழுமனதாக வரவேற்றிருந்தார். இதனை சுட்டிக்காட்டி ட்விட்டரில் பதிவிட்டிருந்தார் பா.ஜ.க செய்தி தொடர்பாளர் எஸ்.ஜி.சூர்யா. "உங்கள் தந்தை ஒரு தேசியவாதி. அவர் உங்களை போல் கீழ் தரமான வாக்கு வங்கி அரசியல் செய்யவில்லை", என்று குறிப்பிட்டிருந்தார்.


அதற்கு ட்விட்டரில் பதிலளித்த விஜய் வசந்த், நான் காங்கிரஸ் கொண்டு வந்த ஜி.எஸ்.டி-யை ஆதரிக்கிறேன், பா.ஜ.க கொண்டு வந்த ஜி.எஸ்.டி-யை ஆதரிக்கவில்லை என்று பதிவிட்டிருந்தார்.

அதற்கு பதிலளித்த பா.ஜ.க செய்தி தொடர்பாளர் எஸ்.ஜி.சூர்யா, "ஜி.எஸ்.டி குறித்து நேரடி விவாதத்திற்கு தயாரா?" என்று விஜய் வசந்திற்கு பகிரங்க சவாலை விடுத்துள்ளார். இது குறித்து எஸ்.ஜி.சூர்யா பதிவிட்ட ட்விட்டர் பதிவுகளில், "விவாததிற்கான இடத்தையும் தளத்தையும் நீங்களே தேர்வு செய்யுங்கள். ஆனால் குடும்ப தலைவர் உதயநிதி போல் நீங்களும் என்னை ப்ளாக் செய்து விடுவீர்கள் என்று தெரியும். அதனால் சில உண்மைகளை இங்கே பதிவிடுகிறேன்.

குஜராத், தமிழகம் போன்ற முக்கிய உற்பத்தி மாநிலங்கள், உங்கள் காங்கிரஸின் ஜி.எஸ்.டி-யை எதிர்த்தன, ஏனென்றால் :

1. உற்பத்தி இடத்திலிருந்து விற்பனை இடத்திற்கு ஜி.எஸ்.டி வரி விதிப்பு புள்ளியை மாற்றுவதால் மாநிலங்கள் வருவாயை இழக்கும்.

2. ஜி.எஸ்.டி கவுன்சிலின் முடிவு தொடர்பாக நிதியமைச்சருக்கு முழுமையான VETO அதிகாரம் உண்டு.

ஆனால் பா.ஜ.க-வின் ஜி.எஸ்.டி-யில்,

1. உற்பத்தி மாநிலங்களுக்கான இழப்புகளை ஈடுசெய்ய 5 வருடங்களுக்கு அரசியலமைப்பு உத்தரவாதம் அளித்துள்ளோம்.

2. மாநிலங்களின் இறையாண்மையை மீறும் நிதி அமைச்சரின் VETO அதிகாரம் நீக்கப்பட்டது (கேரள இடது அரசாங்கத்தின் கோரிக்கையின் அடிப்படையில்) தி.மு.க கூட இதையெல்லாம் ஆதரித்தது.

2013 ஆம் ஆண்டில் உங்கள் சொந்த கேரள காங்கிரஸ் அரசு மற்றும் மகாராஷ்டிரா அரசு மத்திய காங்கிரஸ் அரசாங்கத்தின் ஜி.எஸ்.டி-யை கடுமையாக எதிர்த்தது.

நீங்கள் கூறியது போல் உங்கள் ஜி.எஸ்.டி நன்றாக இருந்திருந்தால், உங்கள் சொந்த அரசாங்கங்கள் ஏன் அதை எதிர்த்தன?

உங்கள் அரசியலில் சற்று உண்மையை பேசுங்கள். உங்கள் தந்தையையும் மதிக்க தெரிந்துகொள்ளுங்கள். நல்வாழ்த்துக்கள்.", என்று பதிவிட்டு அடுக்கடுக்கான உண்மைகளை பகிர்ந்துள்ளார்.


இந்த பதிவுகளுக்கெல்லாம், விஜய் வசந்த் பதில் அளிப்பாரா, அல்லது விவாதத்திற்கான சவாலை ஏற்பாரா என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News