Kathir News
Begin typing your search above and press return to search.

தொட்டுட்டீங்க! இனி நாங்க விடமாட்டோம் - SG சூர்யா கைதுக்கு ஆவேசமாக களமிறங்கும் பாஜக!

தொட்டுட்டீங்க! இனி நாங்க விடமாட்டோம் - SG சூர்யா கைதுக்கு ஆவேசமாக களமிறங்கும் பாஜக!

Mohan RajBy : Mohan Raj

  |  17 Jun 2023 9:12 AM GMT

தமிழகம் பாஜக மாநில செயலாளர் SG சூர்யா கைதுக்கு தமிழக பாஜக எச்சரிக்கை விடுத்துள்ளது.

பாஜக மாநில SG சூர்யா கடந்த சில தினங்களுக்கு முன்பு கடலூர் பெண்ணாடத்தில் நடந்த ஒரு தூய்மை பணியாளர் மரணத்தில் ஏன் கேள்வி எழுப்பவில்லை என மதுரை கம்யூனிஸ்ட் எம்பி சு வெங்கடேசன் அவர்களை குறிப்பிட்டு ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார். அந்த அறிக்கையை காரணமாக காண்பித்து அந்த அறிக்கையின் மீது கோபப்பட்ட திமுக அரசு பாஜக மாநில செயலாளர்கள் SG சூர்யா மீது வழக்கு பதிவு செய்து நேற்று இரவோடு இரவாக அவரை கைது செய்தது.

கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் வரை கைது செய்து SG சூர்யா எங்கே இருக்கிறார் என தெரியவில்லை! அதன் பிறகு பாஜக மாநில நிர்வாகிகள் சென்று போராட்டம் நடத்திய பிறகு அவர் எங்கிருக்கிறார் என தகவல் கூடப்பட்டது. பின்னர் அவர் மதுரை அழைத்துச் செல்லப்பட்டு மருத்துவ பரிசோதனைகளை நீதிபதி முன்பு மேற்கொண்டு ஆஜர் படுத்தப்பட்டார். இந்த நிலையில் தமிழக பாஜக சார்பில் பாஜகவின் செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி பத்திரிகையாளர்களை கமலாலயத்தில் சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, 'நீங்கள் தவறு செய்து விட்டீர்கள் முதல்வர் ஸ்டாலின் அவர்களே! செந்தில் பாலாஜிக்கு எந்த அளவிற்கு வக்காலத்து வாங்கிக் கொண்டு வருகிறீர்கள்? செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்ட பொழுது இரக்கமில்லையா? ஏன் இப்படி எல்லாம் நடந்து கொள்கிறீர்கள் என கேள்வி எழுப்பினீர்களே! இப்பொது என்ன சொல்ல போகிறீர்கள்?

SG சூர்யா வளர்ந்து வரும் இளம் தலைவர், அவர் கேள்வி கேட்டதில் எந்த ஒரு தவறும் கிடையாது! அவர் கடலூரில் நடந்த ஒரு மலக்குழி மரணத்திற்கு ஏன் நீங்கள் குரல் கொடுக்கவில்லை என மதுரை எம்பி வெங்கடேசனை குறிப்பிட்டு கேள்வி எழுப்பி உள்ளார். காரணம் அந்த மலக்குழி மரணம் நடந்ததே விசுவநாதன் என்கின்ற கம்யூனிஸ்ட் கட்சி கவுன்சிலரால் தான் இப்படி கம்யூனிஸ்ட் கட்சி கவுன்சிலர் செய்த தவறினால் ஒரு தூய்மை பணியாளர் உயிர் போயிருக்கிறது என மதுரை எப்படி வெங்கடேசன் ஏன் கேள்வி எழுப்பவில்லை என கேட்டு அறிக்கை வெளியிட்டிருக்கிறார். ஆனால் காழ்ப்புணர்ச்சி கொண்ட திமுக அரசு எப்படியாவது அடக்கி ஒடுக்க வேண்டும் என்பதற்காக குறி வைத்து SG சூர்யாவை கைது செய்துள்ளது. இது கண்டிக்கத்தக்க ஒன்று நீங்க தொட்டுட்டீங்க! ஆனால் இதற்கான விளைவுகளை சந்திப்பீர்கள்! பாஜக என்பது இந்தியா முழுவதும் ஆளும் கட்சி என எச்சரிக்கை விடுத்துள்ளார்' தற்பொழுது பாஜக மாநில செயலாளர் SG சூர்யா கைது செய்யப்பட்ட விவகாரம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News