Kathir News
Begin typing your search above and press return to search.

திருச்சியில் TET தகுதி பெற்ற ஆசிரியர்கள் போராட்டம்.. தி.மு.க அரசு செவி சாய்க்குமா?..

திருச்சியில் TET தகுதி பெற்ற ஆசிரியர்கள் போராட்டம்.. தி.மு.க அரசு செவி சாய்க்குமா?..
X

Bharathi LathaBy : Bharathi Latha

  |  7 Aug 2024 2:50 AM GMT

தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் ஆசிரியர் பணிக்கு 2013ஆம் ஆண்டு தகுதித் தேர்வு நடத்தப்பட்டது. அதில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் அனைவருக்கும் பணி வழங்கப்படவில்லை. இந்த வாக்குறுதியை முன்வைத்து தான் 2021 சட்டப்பேரவை தேர்தலின் போது திமுக போட்டியிட்டது. ஆனால் திமுக ஆட்சி கட்டிலில் அமர்ந்த பின்னர், இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.


இதற்கிடையில் தமிழக அரசின் துரோகத்தை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த 410 பேருக்கு பணி நியமன ஆணை வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில், பாதிக்கப்பட்ட அனைவரையும் பணி நியமனம் செய்யுமாறு தீர்ப்பு வழங்காமல், வழக்கு தொடர்ந்தவர்களுக்கு மட்டும் உயர் நீதிமன்றம் தீர்வை தந்துள்ளது. இதனால் இதர 40000 ஆசிரியர் பெருமக்கள் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தனர்.

இதன் காரணமாக தகுதி அடைந்த அனைவரும் 5 ஆகஸ்ட் 2024 அன்று, 2013 இல் ஆசிரியர் தகுதித் தேர்வில் (TET) தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் திருச்சியில் போராட்டம் நடத்தினர். 40,000 க்கும் மேற்பட்டவர்கள் 11 ஆண்டுகளுக்கும் மேலாக காத்திருக்கும் நிலையில் 410 பேருக்கு மட்டுமே பணி நியமன ஆணை வழங்கியதற்காக திமுக அரசைக் கண்டித்து போராட்டம் நடத்தினர். போராட்டத்திற்கு தலைமை தாங்கிய மாநில ஒருங்கிணைப்பாளர் இளங்கோவன் கூறுகையில், "டி.இ.டியில் குறைந்த மதிப்பெண்கள் பெற்ற இந்த விண்ணப்பதாரர்கள், சட்டப்பூர்வ நடவடிக்கைகளை எடுக்க முடிந்ததால், வேலைவாய்ப்பைப் பெற முடிந்தது. மாநிலம் முழுவதும் 60க்கும் மேற்பட்ட போராட்டங்களை நடத்தி, 2,000க்கும் மேற்பட்ட மனுக்களை முதலமைச்சரின் சிறப்பு பிரிவுக்கு அனுப்பியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் அவர் கூறினார். உண்மையான தேர்வர்களை புறக்கணித்துள்ள பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தற்காலிக நடவடிக்கையாக அரசு 3 சுற்று கூட்டங்களை நடத்தியுள்ளதாகவும், இதை எதிர்ப்பாக கருதாமல் ஆசிரியர்களின் கவனத்தை ஈர்க்கும் வழிமுறையாக கருதுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

Input & Image courtesy:The Commune News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News