10 நாட்கள், ஜப்பான் போன்ற 3 நாடுகள் - முதல்வர் பாரீன் டூரின் பரபர பின்னணி என்ன?
By : Mohan Raj
கேரள முதல்வர் பிரனாய் விஜயனுக்கு இல்லை என்றுவிட்டு தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு அனுமதி அளித்துள்ளது மத்திய அரசு .
மே மாதம் 8 முதல் பத்தாம் தேதி வரை அபிதாபி நாட்டில் நடைபெற இருக்கும் முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு ஐக்கிய அரபு அமீரகத்தின் வர்த்தகத் துறை அமைச்சர் கேரள முதல்வர் பினராய் விஜயனுக்கு அழைப்பு விடுத்திருந்தார். முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொள்வதற்கான அனுமதியை கேரள முதல்வர் பினராய் விஜயன் மத்திய வெளியுறவு துறை அமைச்சகத்திடம் கோரியிருந்தார். அந்த அனுமதி கடிதத்தை நேரடியாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆய்வு செய்ததற்குப் பிறகு முதல்வர் கலந்து கொள்ளும் அளவிற்கு அந்த முதலீட்டாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சி பெருமளவு முக்கியத்துவம் வாய்ந்ததாக அல்ல என்று கூறி அபுதாபி பயணத்திற்கு பினராய் விஜயனின் அனுமதியை மறுத்தார். அதே நேரத்தில் அதிகாரிகள் அபுதாபி மாநாட்டில் கலந்து கொள்ள தடை இல்லை என்றும் சுட்டிக்காட்டி இருந்தது வெளியுறவு துறை அமைச்சகம்.
பிறகு வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் மறுப்பை தொடர்ந்து கேரள முதல்வர் அபுதாபி மாநாட்டில் கலந்து கொள்ள அனுமதிக்குமாறு பிரதமரின் அலுவலகத்தை நாடியிருகிறார். பிரதமர் அலுவலகமும் வெளியுறவு துறை அமைச்சகத்தின் முடிவில் தலையிட மறுப்பதாகவும் தனது பதிலை வெளியிட்டது. பிறகு இதன் அடிப்படையில் கேரள முதல்வர் பினராய் விஜயன் அபுதாபி முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொள்ளும் திட்டத்தை கைவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் வெளிநாடு செல்ல உள்ளதாக பல தகவல்கள் வெளிவந்திருந்தது. அந்த தகவலை தொடர்ந்து தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் ஸ்டாலின் ஜப்பான், சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகளுக்கு மே 23 முதல் ஜூன் 2 வரை சுற்றுப்பயணம் மேற்கொள்வதற்கு மத்திய அரசிடம் அனுமதி கேட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் கேட்டிருந்த வெளிநாட்டு சுற்றுப்பயண அனுமதியை சில நேரங்களிலேயே மத்திய அரசு வழங்கி உள்ளதாகவும் தற்போது தகவல்கள் வெளியாகி வருகிறது. இதற்கு முன்னதாகவும் கடந்து 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் நான்கு நாள் பயணமாக அபுதாபி மற்றும் துபாய்க்கு வெளிநாட்டு பயணங்களை மேற்கொண்டு இருந்தார் முதல்வர் ஸ்டாலின். தற்போது அபுதாபியில் நடைபெறவிருக்கும் முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொள்ள கேரளாவிற்கு மட்டுமல்லாது சத்தீஷ்கர், மகாராஷ்டிரா, கோவா உள்ளிட்ட மற்ற மாநிலங்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் கேரள முதல்வர் பிரனாய் விஜயன் கோரியிருந்த அனுமதிக்கு மறுப்பு தெரிவித்த மத்திய அரசு தற்போது தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு வெளிநாட்டு சுற்றுப்பயணம் மேற்கொள்ள அனுமதி அளித்துள்ளது இதற்கு முன்னதாகவும் துபாய் செல்வதற்கும் மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் கேரள முதல்வர் பிரனாய் விஜயனின் வெளிநாட்டு சுற்றுப்பயணத்திற்கு அனுமதி மறுத்த மத்திய அரசு தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு அனுமதி அளித்திருப்பது இடதுசாரி கட்சிகளிடையே சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. அது எப்படி எதிர்க்கட்சியாக இருந்தாலும் முதல்வர் ஸ்டாலினுக்கு மட்டும் முன்னுரிமை கொடுத்து அயல்நாட்டு பயணங்களுக்கு அனுப்புகின்றனர் என கம்யூனிஸ்ட் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குமுறி வருகின்றன. இந்த நிலையில் மற்றொரு கேள்வியும் எழுந்துள்ளது இதற்கு முன்னதாக தமிழக முதல்வர் துபாய் சென்றிருந்த பொழுது தனது குடும்பம் மொத்தத்தையும் அழித்து சென்றிருந்தார், ஆதலால் தற்போது செல்ல இருக்கும் வெளிநாட்டு பயணம் தனியாகவா அல்லது குடும்பத்துடனா? என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது மட்டுமல்லாமல் முதல்வர் ஸ்டாலின் வெளிநாட்டு பயணம் குறித்து மூத்த பத்திரிகையாளர் சவுக்கு சங்கர் தனியார் யூ ட்யூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் முதல்வர் வெளிநாட்டு பயணம் குறித்து கூறும்போது, 'இப்ப பாஜக அரசு இவங்கள இஷ்டத்துக்கு ஆட வைக்கும், பின்னாலதான் ஆப்பு வைக்கும், பொறுத்திருந்து பாருங்கள்' என கூறியது வேறு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.